சமீப காலமாக காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட இந்திய நிலப்பரப்புகளை காலிஸ்தான் எனும் தனி நாடாக அங்கீகரிக்க கோரி தொடங்கப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் அமெரிக்கா கனடா ஐரோப்பா ஆஸ்திரேலியா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை தளமாக கொண்டு இயங்கி வருகிறது. அந்தந்த நாடுகளில் இருந்து கொண்டே இங்குள்ள பல்வேறு உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகள் கூலிப்படைகள் தொடர்பின் மூலமாக உள்நாட்டில் பெரும் நாச வேலைகளை காலிஸ்தான் பயங்கரவாதம் நிகழ்த்தி வருகிறது .
கடந்த பல ஆண்டுகளில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் விளையாட்டு வீரர்கள் போராட்டம் என்ற பெயரில் உள்நாட்டில் அரசியல் நெருக்கடிகள் பாதுகாப்பு அச்சுறுத்தலிலும் ஏற்படுத்திய பல்வேறு போராட்டங்களின் பின்னணியில் இந்த காலிஸ்தான் இயக்கம் இருந்தது. போராட்டம் என்ற பெயரில் நடந்த வன்முறை கலவரம் தேசிய கொடி அவமதிப்பு உள்ளிட்டவற்றிற்கு முழு ஆதரவும் வன்முறை வெறியாட்டங்களில் காலிஸ்தான் பங்களிப்பும் இருந்தது.
இதைத்தொடர்ந்து மத்திய அரசு இந்த காலிஸ்தான் பயங்கரவாதிகளின் 19 பேரை அடையாளம் கண்டு அவர்களை பட்டியலிட்டு பயங்கரவாதிகளாக அறிவித்தது . தேடப்படும் பட்டியலில் இருக்கும் இவர்களைப் பற்றிய முழு விவரங்கள் சர்வதேச நாடுகள் அவர்களின் உளவுத்துறைக்கும் பகிரப்பட்டது . அதில் ஒரு சிலர் சமீப காலமாக மர்மமாக மரணித்து வந்தார்கள். இதையொட்டி கனடா பாரதத்தின் உளவுத்துறை வெளியுறவுத் துறை மீது குற்றம் சாட்டி கனடா பாரதம் இடையே வெளியுறவுத் துறை முருகல் ஏற்பட்டது.
கனடா பாரதம் இடையேயான ராஜிய சிக்கல் ஒரு புறம் இருக்க கனடா மையமாக செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்நாட்டில் கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்கிறது. திரட்டப்பட்ட உளவுத்துறை ஆவணங்களின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு முகமை நேற்று நாடு முழுவதும் 51 இடங்களில் சோதனை மேற்கொண்டது. காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவாளர்கள் அவர்களோடு நேரடி தொடர்பில் இருக்கும் அமைப்புகள் கூலிப்படை தலைவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது . பஞ்சாப் ஹரியானா புதுடில்லி உத்தர்கண்ட் ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இந்த சோதனை நடந்தேறியது.
இந்த சோதனைகளின் போது துப்பாக்கிகள் தோட்டாக்கள் டிஜிட்டல் சாதனங்கள் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022 முதல் தொடர்ந்து நடைபெறும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு முகமை சோதனையில் இதுவரையில் 370 இடங்களில் சோதனைகள் நடந்திருக்கிறது. இதில் 38 துப்பாக்கிகள் 1, 129 தோட்டக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இவர்களோடு தொடர்புடைய 87 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது . 13 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காலிஸ்தான் பயங்கரவாதம் என்ற பெயரில் உள்நாட்டில் இருக்கும் பிரிவினைவாத பயங்கரவாத அமைப்புகள் கூலிப்படைகளோடு நேரடி தொடர்பில் இருக்கும் இவர்கள் போதை பொருட்கள் கடத்தல் ஆயுதங்கள் கடத்தல் ஆள் கடத்தல் என்று பெருமளவில் சமூக குற்றங்களில் ஈடுபட்டு அதன் மூலம் பொருளாதார ஆதாரங்களை பலப்படுத்தி வருகிறார்கள் . இதில் பலரும் சிறைகளில் இருந்தபடியே அல்லது வெளிநாடுகளில் இருந்தபடியே இங்குள்ள கூலிப்படைகளோடு சதியின் ஈடுபட்டதும் அதன் மூலம் பல்வேறு சமூக குற்றச்சம்பவங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை உள்நாட்டில் அரங்கேற்றியதும் விசாரணையில் அம்பலமாகிறது . இதன் காரணமாக மத்திய அரசு இந்த தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கும் பயங்கரவாதிகளின் சொத்துக்கள் அவர்களின் பொருளாதார மூலங்களை எல்லாம் பறிமுதல் செய்ய தொடங்கி இருக்கிறது.
இதில் கனடாவில் இருந்து இயங்கும் காலிஸ்தான் பயங்கரவாதியான அர்ஷ்டல்லாவின் கூட்டாளி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் புது தில்லியில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளார்கள் . பிரபல தாதாக்களாக அறியப்படும் பலரிடமும் இந்த காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகள் அவர்களின் நிதி திரட்டும் மூலங்கள் உள்ளிட்டவை பற்றி தொடர் விசாரணை நடந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதத்தின் நடவடிக்கைகளையும் அதன் மூலமாக பொருளாதார நிதி ஆதாரங்களையும் முழுமையாக முடக்குவதற்கு இந்திய வெளியுறவுத் துறையும் உளவுத்துறையும் இணைந்து உலக அளவில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . அதன் மூலம் திரட்டப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த சோதனைகள் நடப்பதாக அறியப்படுகிறது.
இதன் மூலம் உறுதி செய்யப்படும் குற்றங்கள் குற்றவாளிகள் அடிப்படையில் இனி உள்நாட்டில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒரு குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்பு அதனோடு தொடர்பில் இருக்கும் இரண்டாம் நிலை அமைப்புகள் தலைவர்கள் மையப்படுத்தி தேசிய பாதுகாப்பு முகமை நேரடியாக களமிறங்கி செய்யும் மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் காலிஸ்தான் பயங்கரவாதத்திற்கு பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் பின்னடைவை தரக்கூடியதாக இருக்கும் . அது உள்நாட்டில் இருந்து செயல்படக்கூடிய பல்வேறு பிரிவினைவாத பயங்கரவாத அமைப்புகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் .