நீட் தேர்வில் சாதனை: மாணவிக்கு பா.ஜ.க. நிதியுதவி!

நீட் தேர்வில் சாதனை: மாணவிக்கு பா.ஜ.க. நிதியுதவி!

Share it if you like it

நீட் தேர்வில் சாதனை படைத்த மதுரை மாணவி தங்கப்பேச்சிக்கு பா.ஜ.க. நிதியுதவி செய்திருக்கிறது. இதற்கு பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை பூர்த்தி செய்யும் வகையில், மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்ததுதான் நீட் தேர்வு. கல்வியாளர்கள், புகழ்பெற்ற மருத்துவர்கள் என பலரும் நீட் தேர்விற்கு தங்களது ஆதரவினை தெரிவித்திருந்தனர். அதேபோல, இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும், நீட் தேர்விற்கு வரவேற்புத் தெரிவித்துள்ளன. ஆனால், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு மட்டும் நீட் தேர்விற்கு எதிராக தொடர்ந்து பொய்ப் பிரசாரங்களை இன்று வரை மேற்கொண்டு வருகிறது.

மேலும், சூர்யா போன்ற சில கார்ப்பரேட் நடிகர்களும், போலி போராளிகளும் நீட் தேர்வுக்கு எதிராக தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அவர்களின் கருத்துக்களை எல்லாம் புறம் தள்ளி விட்டு அரசு பள்ளி மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதுரை பனமூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பேச்சி என்னும் மாணவி தனக்கு படிப்பிற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, ‘நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மதுரையில் டாக்டராகும் தங்கை தங்கப்பேச்சியை நாங்கள் பார்த்துக்கொள்வோம். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால்தான் அவர் நீட் தேர்வில் நுழைய முடிந்தது. இதுதான் உண்மையான சமூகநீதி. வெகு விரைவில் மாணவியை தொடர்பு கொள்வோம்’ என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், மதுரை மாவட்ட பா.ஜ.க. தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சரவணன், மாணவி தங்கப்பேச்சியைத் தொடர்பு கொண்டு, தனது அலுவலகத்திற்கு இன்று (பிப்.3-ம் தேதி) அவரை அழைத்து 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். பா.ஜ.க. செய்த நிதியுதவிக்கு பொதுமக்கள் உட்பட பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், நீட் தேர்வில் சாதனை புரிந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடிகர் சூர்யா உள்ளிட்ட எந்த ஒரு போலி போராளிகளும் இன்று வரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களால் முடியாது என்று கூறி நீட் தேர்விற்கு எதிராக பிரசாரம் செய்து வருவதற்கு பதில் நடிகர் சூர்யா போன்றவர்கள், நீட் தேர்வில் சாதனை படைத்து வரும் ஏழை அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை பா.ஜ.க. போன்று ஏற்க முன்வர வேண்டும் என்பதே அனைவரின் கருத்து.

குடும்பத்தினருடன்  தங்கப்பேச்சி
குடும்பத்தினருடன்
குடும்பத்தினருடன் தோட்ட வேலையில்

Share it if you like it