கவர்னரை அவன், இவன் என ஏகவசனம்: தி.மு.க. நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு; வலுக்கும் கண்டனம்!

கவர்னரை அவன், இவன் என ஏகவசனம்: தி.மு.க. நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு; வலுக்கும் கண்டனம்!

Share it if you like it

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, அவன், இவன் என தி.மு.க. நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி பேசிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. பாரதிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றனர்.

தி.மு.க.வினரை பொறுத்தவரை, வெறும் வாய்வார்த்தையில்தான் சமுகநீதி, சுயமரியாதை, பெண் சுதந்திரம் என பேசுவார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் நேர் எதிராக நடப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் கூட, தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளரான சைதை சாதிக் என்பவர், பா.ஜ.க.வில் இருக்கும் நடிகைகள் குஷ்பு, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம் ஆகியோரை மிகவும் கீழ்த்தரமாகவும், இழிவாகவும் விமர்சித்து பேசியதும், அவர் நடிகைகளிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோர்ட் குட்டு வைத்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தற்போது தமிழகத்தின் முதல் குடிமகனான கவர்னரை அவன், இவன் என்று ஏகவசனத்தில் பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

தமிழகம் முழுவதும் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தை தி.மு.க. நடத்தி வருகிறது. அந்த வகையில், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசிய தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “பா.ஜ.க. ஒரு ரூமில் இருக்கக் கூட முடியாத கட்சி. அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால், 2 நாள் சென்ட்ரல் ஜெயிலில் வைத்தால் போதும், அக்கட்சியே இருக்காது. அதேபோல, மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினால் ஒரு நாள் இரவு மட்டும் ஜெயிலில் வையுங்கள், ஜட்டி கிட்டி எல்லாம் கழட்டிருவானுங்க.

கவர்னருக்கு சம்பளம் குடுக்கிறது நம்ம வரிப்பணத்துலதான். அவர்(ன்) டீக்குடிக்கிறதுல இருந்து அவர்(ன்) போடுற சொக்காய் கிளீன் பண்றவனுக்கு சம்பளம் குடுக்குறது வரை நீயும், நானும் குடுக்குற வரிப்பணத்துலதான். நம்மகிட்ட வரிப்பணத்த வாங்கி, நம்ம செலவுல உட்கார்ந்திருக்குற கவர்னர், ராஜ்பவன்ல கூட்டம் நடத்தி, திராவிடம்கிற ஒரு நாடே கிடையாதுங்குறார்(ன்). ஐ.பி.எஸ். படிச்சுட்டு வர்றவனுங்க பூராம் மெண்டல்களாகத்தான் இருப்பானுங்கபோல. எல்லா சமூக விரோதியும், அண்ணாமலை தலைவரான பிறகு பா.ஜ.க.வில் மெம்பராகி விட்டார்கள். தி.மு.க.வுக்கு யாரேனும் துரோகம் செய்தால் விளைவு வேறு விதமாக இருக்கும். ஒன்று அவர்கள் நீதிமன்றத்துக்குப் போக வேண்டும் அல்லது கை,கால் இல்லாமல் போக வேண்டும்” என்று கை,கால்களை வெட்டிவிடுவோம் என்கிற ரீதியில் பேசியிருக்கிறார்.

ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சுதான் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஆர்.எஸ்.பாரதி வாய்த்துடுக்காக பேசுவதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஏற்கெனவே, மீடியாக்களை ரெட் லைட் மீடியா என்று பேசி பெரும் பரபரப்பையும், சர்ச்சையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதேபோல, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக இருப்பது கருணாநிதி போட்ட பிச்சை என்றும் கூறி, நீதிபதிகளையும் களங்கப்படுத்தியவர் இதே ஆர்.எஸ்.பாரதிதான். இதற்காக அவர் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டதும் குறிப்பிடத்தக்கது. கவர்னர் பற்றிய பேச்சுக்கும் மன்னிப்புக் கேட்பார் என்று எதிர்பார்க்கலாம்.


Share it if you like it