ராம நவமி தினமான இன்று ராமர் படத்தை எரிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிக்கை வெளியிட்டிருந்த பெரியார் திராவிட மக்கள் தமிழகம் அமைப்பின் தலைவர் மாயாண்டியை போலீஸார் கைது செய்தனர்.
ஹிந்துக்களின் பண்டிகைகள் நடக்கும் போதெல்லாம், கடவுள் இல்லை என்று சொல்லும் திராவிட கும்பல் ஏதாவது சில்லறைத்தனமான வேலைகளில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சிலைகளை தரையில் போட்டு உடைப்பது, ராம நவமியன்று ராமர் படத்தை இழிவுபடுத்துவது, கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரை அவமதிப்பது உள்ளிட்ட சில்லறைத்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஹிந்துக்கள் அமைதியானவர்கள், சகிப்புத்தன்மை கொண்டவர்கள், ஆகவே எதுவும் செய்ய மாட்டார்கள் என்று அசட்டு தைரியத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. ஹிந்து கடவுள்கள் அவமதிக்கப்பட்டாலோ, ஹிந்துக்களையோ, ஹிந்து மதத் தலைவர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டால் உடனடியாக பதிலடி கொடுத்து வருகிறார்கள் ஹிந்துக்கள். அந்த வகையில், ராம நவமி தினமான இன்று ராமர் போட்டோவை எரிக்கும் போராட்டத்தை நடத்தப்போவதாக பெரியார் திராவிட மக்கள் தமிழகம் என்கிற பெயரில் லெட்டர் பேடு அமைப்பை நடத்தி வரும் திருநெல்வேலியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் அறிவித்திருந்தார். இதுகுறித்து ஹிந்து அமைப்புகள் சார்பில் புகார் செய்யப்பட்ட நிலையில், மதம், மத நம்பிக்கைகள் மற்றும் மத உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாக மாயாண்டியை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
இனி யாராவது ஹிந்து கடவுள்களையோ, மதத் தலைவர்களையோ, மத நம்பிக்கைகளையோ அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டால், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று ஹிந்து அமைப்புகள் அறிவித்திருக்கின்றன. இது ஒரு பாடமாக இருக்கட்டும்!