ஆதீனங்கள் புடைசூழ செங்கோலை நிறுவி புதிய பார்லிமென்டை திறந்த பிரதமர்!

ஆதீனங்கள் புடைசூழ செங்கோலை நிறுவி புதிய பார்லிமென்டை திறந்த பிரதமர்!

Share it if you like it

தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பார்லிமென்ட் கட்டடத்தை, ஆதீனங்கள் புடைசூழ செங்கோலை நிறுவி திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கும் பார்லிமென்ட் கட்டடம் மிகவும் பழமை வாய்ந்தது. ஆகவே, அக்கட்டடத்திற்கு பதிலாக, அதன் அருகிலேயே 64,500 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான புதிய பார்லிமென்ட் கட்டப்பட்டது. நான்கு அடுக்கு மாடிகளை கொண்ட இப்புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் மக்களவை, மாநிலங்களவை கூடுவதற்காக தனித்தனி அரங்கங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அதேபோல, இரு மிகப்பெரிய ஆலோசனை கூடங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும், உலகின் மிகப்பெரிய பார்லிமென்ட் கட்டடங்களில் இதுவும் ஒன்றாகும். முக்கோண வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் இக்கட்டடம் முழுக்க முழுக்க இந்திய கட்டட கலை பாணியில் கட்டப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இன்று புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பாரத பிரதமர் மோடி திறந்து வைத்திருக்கிறார். முன்னதாக காலை 7.30 மணியளவில் திறப்பு விழாவிற்கான பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. பிறகு, ஆதீனங்கள் தேவாரம் முழங்க, பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து, செங்கோலை கையில் ஏந்தியபடி ஆதீனங்களிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி, பார்லிமென்ட் மக்களவைக்குள் சென்று தமிழக செங்கோலை நிறுவினார். சபாநாயகர் இருக்கைக்கு அருகே கண்ணாடி பெட்டிக்குள் இந்த செங்கோல் நிறுவப்பட்டது. தொடர்ந்து, பிரதமர் மோடியும், சபாநாயகர் ஓம் பிர்லாவும் மக்களவைியல் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

நிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் 20 ஆதீனங்கள் பங்கேற்றனர். மேலும், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.


Share it if you like it