மாஜி ராணுவ அதிகாரி அவமதிப்பு: தி.மு.க. நிர்வாகிக்கு முட்டு கொடுத்த நெறியாளர்!

மாஜி ராணுவ அதிகாரி அவமதிப்பு: தி.மு.க. நிர்வாகிக்கு முட்டு கொடுத்த நெறியாளர்!

Share it if you like it

மாஜி ராணுவ அதிகாரியை தி.மு.க. நிர்வாகி இழிவுப்படுத்திய போது அதனை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்த நியூஸ் 18 ஊடக நெறியாளருக்கு பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில், உள்ள பெரும்பாலான ஊடகங்களில் தி.மு.க. மற்றும் தி.க.வின் தீவிர ஆதரவாளர்கள் மட்டுமே நிரம்பி இருக்கின்றனர் என்பதே பலரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அந்த வகையில், மாலை முரசு ஊடக நெறியாளர் செந்தில், புதிய தலைமுறை கார்த்திகேயன், நியூஸ் 18 கார்த்திகை செல்வன், தம்பி தமிழரசன் ஆகியோர் ஆளும் கட்சியிக்கு ஆதரவாக செயல்பட கூடிய நெறியாளர்கள். அதே போல, நியூஸ் 7 தமிழ் ஊடக நெறியாளர் சுகிதாவும் தி.மு.க.விற்கு ஆதரவானவர் என்று சொல்லப்படுகிறது.

இதனிடையே, நியூஸ் 7 தமிழ் அண்மையில் ஊடக விவாதம் ஒன்றினை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரி கர்னல் தியாகராஜன் மற்றும் வி.சி.க.வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரான வன்னியரசு மற்றும் இன்னும் பிற விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, வி.சி.க. நிர்வாகி பேசும் போது இவ்வாறு கூறினார் ;

கொரோனா காலத்தில் நாட்டு மக்களை எப்படி பாரதப் பிரதமர் மோடி கைதட்ட சொன்னாரோ? லைட் பிடிக்க சொன்னாரோ அது போன்ற கேலி கூத்தாக இல்லம் தோறும் தேசிய கொடியை ஏற்ற சொன்ன நிகழ்வை நான் பார்க்கிறேன் என வன்னியரசு தெரிவித்து இருந்தார்.

இதற்கு, ஓய்வு பெற்ற இராணுவ உயர் அதிகாரி கர்னல் தியாகராஜன், தேசிய கொடியை மதிக்காத காரணத்தால் ஒரு இராணுவ வீரனாக மற்றும் ஒரு இந்திய குடிமகனாக இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறேன். நியூஸ் 7 ஊடக விவாதத்தில் இனி எப்போதும் கலந்து கொள்ள மாட்டேன் என அந்த நிகழ்ச்சியில் இருந்து ஆவேசமாக வெளியேறினார். தேசிய கொடியை அவமதித்த வி.சி.க. நிர்வாகியின் பேச்சை கண்டிக்காமல் நெறியாளர் சுகிதா நடந்து கொண்ட விதம் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Image

இப்படிப்பட்ட சூழலில், பிரபல ஊடகமான நியூஸ் 18 நேற்றைய தினம் கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக சொல்லதிகாரம் எனும் ஊடக விவாதத்தை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, தி.மு.க. ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம், ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரி கர்னல் தியாகராஜன் மற்றும் ஸ்ரீராம் சேஷாத்ரி பங்கேற்றனர். நெறியாளராக தம்பி தமிழரசன் இருந்தார்.

இதையடுத்து, தி.மு.க. நிர்வாகி ராஜீவ் காந்தி பேசும் போது, முன்னாள் ராணுவ உயர் அதிகாரியை பார்த்து நீங்கள் ஒரு தேச துரோகி என்று கூறினார். நாட்டிற்காக, உழைத்த ராணுவ உயர் அதிகாரியின் மீது சேற்றை வாரி இறைத்த தி.மு.க. நிர்வாகியை கண்டிக்காமல் நெறியாளர் தம்பி தமிழரசன் நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, இந்த நிகழ்ச்சியில் இருந்து தாம் வெளியேறுவதாக தியாகராஜன் கூறினார். அதேபோல, தாமும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக ஸ்ரீராம் சேஷாத்ரி கூறினார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நியூஸ் 18 ஊடக நெறியாளர் தம்பி தமிழரசன் ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியின் சார்பில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவத்தை இன்று வரை வழங்கி வருகிறார். அதனை மெய்ப்பிக்கும் வகையில், இதே, நியூஸ் 18 அண்மையில் ஊடக விவாதம் ஒன்றினை நடத்தியது. இதில், கலந்து கொண்ட வன்னியரசு பாரதப் பிரதமர் மோடியை கொலைக்காரன் என்று கூறிய போது அதனை கண்டிக்காமல் இருந்தவர் தான் இதே தம்பி தமிழரசன் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.


Share it if you like it