குணசேகரனையே ஓவர்டேக் செய்து பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பும் நியூஸ் 7 தமிழ்..!

குணசேகரனையே ஓவர்டேக் செய்து பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பும் நியூஸ் 7 தமிழ்..!

Share it if you like it

தி.மு.க அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டாமல்., மற்றொரு சன் நியூஸ் ஊடகம் போல தி.மு.க-விற்கு தொடர்ந்து முட்டு கொடுப்பதையே இன்று வரை வாடிக்கையாக கொண்டுள்ள ஊடகமாக நியூஸ் 7 தமிழ் மாறி வருவதை தமிழக மக்கள் தற்பொழுது நன்கு உணர்ந்து உள்ளனர்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் விநாயகர் சதுர்த்தி பற்றி கூறிய கருத்தினை திரித்து. தி.மு.க-வின் ஆட்சி கவிழும் என்பது போல் பா.ஜ.க தலைவரின் நற்பெயரை கெடுக்கும் விதமாக அண்மையில் செய்தி வெளியிட்டதற்கு பொதுமக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை தங்களின் கடும் கண்டனத்தை நியூஸ் 7 தமிழுக்கு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. கொரோனா எதிரொலி காரணமாக காணொலியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், 20 மாதங்களுக்கு பிறகு மாநில நிதியமைச்சர்கள் இக்கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டுள்ளனர்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க, தாமதமாக அழைப்பு வந்ததாலும், முதலில் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் பல முக்கிய நிகழ்வு இல்லாத காரணத்தாலும், தான் கூட்டத்தில் பங்கேற்கவில்லை நிதியமைச்சர் கூறியிருந்தார். வழக்கம் போல இது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என்று பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை டெல்லியில் நடைபெற்றது என நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டு உள்ளது. பா.ஜ.க அரசு , மோடி, என்றால் உடனுக்கு உடன் பொய் செய்திகளை பரப்பும் சன் நியூஸையே, ஓவர் டேக் செய்யும் விதமாக தி.மு.க-வின் தீவிர விசுவாசியாக மாறி தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் தமிழக மக்களுக்கு பொய்யான தகவலை தருவது மீண்டும் மக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image
Image


Share it if you like it