உலகளவில் 60% சதவீத தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து வினியோகம் செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய காங்கிரஸ் அரசு இந்திய நாட்டை சின்னா பின்னமாக்கி இருந்தது. இதையடுத்து, கடந்த 2014- ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், நாட்டு மக்கள் மரண அடியை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி இருந்தனர். இதையடுத்து, பாரதப் பிரதமராக மோடி பதவியேற்றார். அந்த வகையில், நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன்காரணமாக, அந்நிய முதலீடுகள் மற்றும் இந்தியாவின் நற்பெயரும் உயர்ந்தன.
இந்த நிலையில், கொரோனா தொற்று எனும் கொடிய நோய் உலக நாடுகளை ரத்த கண்ணீர் வடிக்க வைத்தது. இதையடுத்து, ஏழை நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை விழி பிதுங்கி நின்றது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் காரணமாக கொரோனாவில் இருந்து இந்தியா மீண்டது. இதனை தொடர்ந்து, பல்வேறு நாடுகள் இந்தியாவின் உதவியை நாடின. அந்தவகையில், பிரதமர் மோடியின் மிக நெருங்கிய நண்பரான, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, “பகவான் ராமரின் சகோதரரான லக்ஷ்மணனைக் காப்பாற்ற புனித மருந்தை இமாலயத்திலிருந்து பகவான் அனுமான் எடுத்து வந்தார். அதேபோல, கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் உலகளாவிய பிரச்சினையை இந்தியாவும் பிரேசிலும் இணைந்து எதிர்கொண்டு வெற்றி பெறும்,” என்று கடிதம் எழுதியதோடு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தங்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு பாரதப் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழலில் தான், உலகளவில் பயன்படுத்தப்படுகிற தடுப்பூசிகளில் 60% சதவீத தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமையுடன் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்தான, செய்தியினை பிரபல பத்திரிகையான தினத்தந்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.