வட சென்னை மக்களவை தொகுதி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரே நேரத்தில் வந்து தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் நடத்தும் அதிகாரி கட்டா ரவி தேஜாவிடம் வேட்புமனு தாக்கல் செய்ய அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ முதலாவதாகவும், இரண்டாவதாக திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியும் வந்தனர். அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் அலுவலர் அறைக்குச் சென்றனர்.
இதையடுத்து, யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என திமுக வேட்பாளருடன் வந்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திமுக வேட்பாளருக்கு 2-ம் எண்டோக்கனும், அதிமுக வேட்பாளருக்கு 7-ம் எண் டோக்கனும் வழங்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
தேர்தல் அலுவலரிடம் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி முதலில் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய முயன்றார். அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வாக்குவாதத்தில் திமுக அமைச்சர் சேகர்பாபு அதிமுக நிர்வாகியை வாடா போடா என்கிற தரக்குறைவான முறையில் பேசினார். அதுவும் தேர்தல் அதிகாரி முன்பே மிகவும் ஆக்ரோஷமாக திமுக அமைச்சர் சேகர்பாபு பேசும் காணொளியானது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய வந்தததற்கே இந்த ரௌடிசம் என்றால், இவர்கள் தேர்தலில் ஜெயித்து அமைச்சராகி விட்டால் மக்களின் நிலை அரோகதி தான் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
https://x.com/karthikgnath/status/1772513525208064014?s=20