திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர், பிரச்சாரம் மேற்கொள்ள திருவள்ளூர் தொகுதிக்கு சென்றிருக்கிறார். அவர் பிரச்சார வாகனத்தில் பேசுவதை கேட்க பொதுமக்கள் ஒருவர் கூட இல்லை. நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கீழே இரண்டு பேர் கொடி பிடித்து அவர் பேசுவதை கேட்டு கொண்டுள்ளார். இருப்பினும் மனம் தளராமல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் தொண்டை கிழிய யாருமே இல்லாத சாலையில் பிரச்சார வாகனத்தில் பேசி கொண்டிருக்கும் காணொளியானது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற, உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா என்று நாதக வேட்பாளரை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள் !
முன்னதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரபுசங்கரைச் சந்தித்து, ஜெகதீஷ் சந்தர் தனது வேட்பு மனுவை அளித்த நிலையில், தமிழில் உள்ள உறுதி மொழி பத்திரத்தை வாசிக்க முடியாமல் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் திணறி பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுசங்கர் வாசிக்க, அவரை பின்தொடர்ந்து வேட்பாளர் உறுதிமொழியை வாசித்தது குறிப்பிடத்தக்கது.
https://x.com/polimernews/status/1775030451507450069?s=20