நுபுர் ஷர்மா ஒரு ஹீரோ: அவர் மன்னிப்பு கேட்கக் கூடாது! சொன்னது யார் தெரியுமா?

நுபுர் ஷர்மா ஒரு ஹீரோ: அவர் மன்னிப்பு கேட்கக் கூடாது! சொன்னது யார் தெரியுமா?

Share it if you like it

நுபுர் ஷர்மா மன்னிப்பு கேட்க கூடாது என நெதர்லாந்து நாடாளுமன்று உறுப்பினர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

பா.ஜ.க.வின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தவர் நுபுர் ஷர்மா. இவர், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அண்மையில் ஏற்பாடு செய்து இருந்த ஊடக விவாதத்தில் கலந்து கொண்டார். அந்தவகையில், ரெஹ்மானி என்கிற இஸ்லாமியரும் இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து, அவர் பேசும் பொழுது கோடிக்கணக்கான ஹிந்துக்கள் வணங்கும் சிவலிங்கத்தை மிகவும் இழிவாகப் பேசியிருந்தார். இதனால், கடும் சினம் கொண்ட நுபுர் ஷர்மா குரானில் இருக்கும் செய்தி ஒன்றினை மேற்கொள் காட்டி பேசியிருந்தார். இதையடுத்து, பல இஸ்லாமிய நாடுகள் இந்தியா உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என கருத்து தெரிவித்து இருந்தன.

இதற்கு, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரபு நாடுகளுக்கு ஒத்து ஊதும் விதமாக கருத்து தெரிவித்து இருந்தன. அந்தவகையில், இந்த விவகாரத்தில் இந்தியா மன்னிப்புக் கேட்டக் கூடாது என்று நெதர்லாந்து சுதந்திர கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க்ரீட் வீல்டர்ஸ் இந்தியாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார்.

அந்தவகையில், நுபுர் ஷர்மா உடனே நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று கருத்து தெரிவித்து இருக்கிறது. இதற்கு, க்ரீட் வீல்டர்ஸ் மீண்டும் தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவில் ஷரியா நீதிமன்றங்கள் இல்லை என்று நினைத்தேன். முகமதுவைப் பற்றி உண்மையைப் பேசியதற்காக அவர் ஒருபோதும் மன்னிப்பு கேட்கக் கூடாது. உதய்பூர் சம்பவத்திற்கு அவர் பொறுப்பல்ல. தீவிர சகிப்புத்தன்மையற்ற ஜிஹாதி முஸ்லிம்கள் தான் இதற்கு பொறுப்பு வேறு யாரும் அல்ல. நுபுர் ஷர்மா ஒரு ஹீரோ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


Share it if you like it