ஒடிசா ரயில் விபத்து: ஜூனியர் இன்ஜினியர் அமீர் கான் குடும்பத்துடன் தலைமறைவு!

ஒடிசா ரயில் விபத்து: ஜூனியர் இன்ஜினியர் அமீர் கான் குடும்பத்துடன் தலைமறைவு!

Share it if you like it

ஜீனியர் இன்ஜினியர் குடும்பத்துடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் கடந்த ஜூன் இரண்டாம் தேதி மிக கோரமான விபத்தை சந்தித்தன. இந்த, கோர விபத்தில் 290-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. இதனிடையே, ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், மத்திய புலனாய்வு அமைப்பினர் கடந்த திங்களன்று சோரோ பிரிவு சிக்னல் ஜூனியர் இன்ஜினியர் (JE) வாடகை வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர்.

சோரோவில் உள்ள அன்னபூர்ணா ரைஸ் மில் அருகே உள்ள  ஜூனியர் இன்ஜினியர் அமீர்கானின் வாடகை வீட்டிற்கு திங்கள்கிழமை சென்ற சிபிஐ குழு, வீடு பூட்டப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். அதன்பின்னர், அமீர்கானின் வீட்டிற்கு சீல் வைத்தனர். இரண்டு சிபிஐ அதிகாரிகளும் வீட்டைக் கண்காணித்து வருவதாக புலானாய்வு வட்டாரம் தெரிவித்துள்ளன.

ஒடிசா ரயில் விபத்தில் இது வரை 290 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்னும் அடையாளம் காணப்படாத உடல்களை உறவினர்கள்  அடையாளம் கண்டு உடலை பெற்றுக்கொள்ளும்படி இந்திய ரயில்வேத் துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it