கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் நந்தனார் குருபூஜை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள நேற்று இரவு கடலூர் வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தமிழக ஆளுநர் ஆர்,என்.ரவி, “தமிழகத்தில் ஒவ்வொரு நிகழ்விலும் சாதிய வன்கொடுமை நடப்பது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகிறது என்றும், அதிகபட்சமான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது இல்லை என்றும், குற்றசெயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்தார். குடிநீரில் மனித கழிவுகள் கலப்பது மற்றும் பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்ற பெண், பட்டியலினத்தவர் என்பதால் பதவியேற்க முடியவில்லை என்றும், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 7 சதவீத குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என வேதத்தில் குறிப்பிடவில்லை. நாம் அனைவரும் ஒன்று தான் என உள்ளது. அனைவரது மனங்களில் இறைவன் குடியிருக்கும்போது உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று எப்படி இருக்க முடியும். இவ்வாறு ஆளுநர் ரவி பேசினார்.