புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து தி.மு.க.வை திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் மிக கடுமையாக சாடியிருக்கிறார்.
காலா, கபாலி, அட்டகத்தி உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்தவர் பா. ரஞ்சித். இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் தீவிர ஆதரவாளர். இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் ஹிந்துக்களின் உணர்வுகளை சீண்டுவது போல இருக்கும். திருமாவின் ஆதரவாளராக இருந்தாலும், விடியல் ஆட்சியில் நிகழும் அவலங்களை சுட்டிக்காட்டுவதை வழக்கமாக கொண்டவர்.
அந்தவகையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு பா. ரஞ்சித் வெளியிட்டு இருந்த பதிவில், விடியல் ஆட்சியிலும் தொடரும் சென்னை பூர்வகுடிகள் மீதான அடக்குமுறை! நீதிமன்ற உத்தரவு இம்மக்களுக்கு மட்டும் தானா? மாற்று திட்டம் என்பது சென்னையை விட்டு வெளியேற்றுவது மட்டும் தானா? இம்மக்களின் உரிமையை, உணர்வை, கோரிக்கையை எப்போது யோசிக்க, மதிக்க தொடங்குவீர்கள் தமிழக அரசே? என்று காட்டமான முறையில் கேள்வி எழுப்பி இருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கடும் விவாதத்தையும் கிளப்பி விட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தான், தி.மு.க.வை பா. ரஞ்சித் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அவரின், பதிவு இதோ ;
புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள்.
வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள் என குறிப்பிட்டுள்ளார்.