பாகிஸ்தானில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டு இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவின் அண்டைநாடு பாகிஸ்தான். இந்நாடு, தற்பொது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மேலும், பசி, பஞ்சம், பட்டினி அந்நாட்டை ஆட்டிபடைத்து வருகிறது. போதிய உணவுகள் இல்லாமல் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான் மக்கள் இன்று வரை தவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான்.
இவரது, ஆட்சியில் பல்வேறு ஊழல்களும், முறைகேடுகளும் நடந்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்த வகையில், இம்ரான்கான் அரசு கலைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டார். ,இம்ரான்கானின் கைது நடவடிக்கையை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய கலவரமாக மாறி இன்று பாகிஸ்தான் பற்றி எரியும் நிலைக்கு சென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.