பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

Share it if you like it

இந்தியா மீது தொடர்ந்து அபாண்டமாக பழிசுமத்தி வரும் பாகிஸ்தானின் பொய்ப் பிரசாரத்துக்கு, ஐ.நா. சபையில் இந்தியா தக்க பதிலடி கொடுத்திருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஹினா ரப்பானி கர் நேற்று முன்தினம் பேசுகையில், காஷ்மீரில் வசிக்கும் இஸ்லாமியர்களின் வீடுகளை, இந்திய அரசு இடித்துத் தள்ளுகிறது. மேலும், இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தை இந்தியா கேள்விக்குறியாக்கி வருகிறது என்று கூறியிருந்தார். இந்த சூழலில், இதற்கு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் பதிலடி கொடுத்த பேசிய இந்திய பிரதிநிதி சீமா பூஜானி, “பாகிஸ்தான் மக்கள் தங்கள் விடுதலைக்காகவும், அடிப்படை வாழ்வாதாரத்திற்காகவும் போராடி வருகின்றனர்.

இதை கவனிக்க வேண்டிய அந்நாட்டு அரசு, அதில் கவனம் செலுத்தாமல், இந்தியா மீது வெறிகொண்டு விஷமத்தனமான பிரசாரங்களை செய்து வருகிறது. இதை நிறுத்திவிட்டு தங்கள் நாட்டு மக்களின் நலனுக்காக பாகி்தான் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை கூற விரும்புகிறேன். அதேபோல, முழுகக முழுக்க உள்நாட்டு விவகாரமான காஷ்மீர் பிரச்னை குறித்து துருக்கியும், ஐ.ஓ.சி. எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் கருத்துத் தெரிப்பது வருத்தம் அளிக்கிறது. இதிலிருந்து அவர்கள் விலகி இருக்கும்படி அறிவுறுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it