பாரதத்தைப் பார்த்து பயம் கொள்ளாத ஒரே நாடு பாகிஸ்தான் தான்

பாரதத்தைப் பார்த்து பயம் கொள்ளாத ஒரே நாடு பாகிஸ்தான் தான்

Share it if you like it

சமீப காலமாக காலிஸ்தான் பயங்கரவாதிகள் மர்ம மரணம் தொடர்பாக பாரதத்திற்கும் கனடாவிற்கும் ராஜிய ரீதியிலான முருகல்கள் அதிகரித்து வருகிறது. இதில் கனடா தனது நட்பு நாடுகள் சர்வதேச கூட்டமைப்புகளின் உதவியை நாடியது. அவர்களும் கைவிரித்து பாரதத்தின் உண்மை தன்மையில் உறுதியாக நிற்பதால் கனடா உலகளவில் தனிமைப்படுத்தப்படுகிறது. உள்நாட்டில் சரிந்து போன தனது செல்வாக்கை தூக்கி நிறுத்த வேண்டும் என்ற திட்டத்தோடு காலிஸ்தான் வாக்கு வங்கியையும் தக்கவைத்துக் கொள்ளலாம். உலக அரங்கில் பாரதத்தை தட்டி வைத்த நாடு என்ற பெருமையையும் பெற்றுவிடலாம் என்று திட்டமிட்டு களமிறங்கியவர் கனடா பிரதமர். இன்று எதிர்க்கட்சிகள் ஊடகங்கள் சொந்த நாட்டு மக்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் நிற்கிறார் . மறுபுறம் நேச நாடுகள் நட்பு நாடுகள் எல்லாம் பாரதம் முன்வைத்த ஆவணங்கள் சாட்சியங்கள் அடிப்படையில் அடுத்தடுத்து கேள்விகள் எழுப்புவதில் செய்வதறியாமல் தவிக்கிறது. மறுபுறம் பாரதத்தின் உளவுத்துறை மீது முன்வைத்த குற்றச்சாட்டிற்கு இன்று வரை உருப்படியாக ஒரு ஆவணத்தையும் முன்வைக்க முடியாமல் தானே குற்றவாளியாக மாற வேண்டிய கட்டாயத்தில் கனடா பிரதமர் நிற்கிறார்.

கனடா நாட்டு மக்களுக்கு விசா வழங்கல் நிறுத்தம். அடுத்த கட்டமாக பொருளாதார தடைகள் கனடா மீது விதிக்கு கூடும் என்ற பாரதத்தின் அடுத்தடுத்த நகர்வுகளை எப்படி இருக்குமோ ? என்று சர்வதேச நாடுகள் எதிர்நோக்கி இருக்கிறது. அதே நேரத்தில் இதுவரையில் எந்த ஒரு நாடும் கனடாவின் குற்றச்சாட்டிற்கு ஆதரவாகவோ வலு சேர்க்கும் வகையிலோ ஒரு கருத்தும் முன்வைக்கவில்லை. சீனா பாகிஸ்தான் உட்பட அனைத்து நாடுகளும் அமைதி காக்கிறது . ஆனால் கனடாவின் குற்றச்சாட்டில் இருக்கும் உறுதியற்ற தன்மையை ஆதாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டை எல்லா நாடுகளும் கனடாவிற்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறது. மாறாக பாரதத்தின் மீது வன்மம் கொண்டு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் கனடாவிற்கு எதிராகவே மாறும் .உலக அரங்கில் கனடா தனிமைப்படுத்தப்படும் என்று எச்சரிக்கிறது. அந்த வகையில் தன்னுடைய உண்மைத் தன்மை நேர்மை ராஜ்ய நிலைப்பாடுகளால் உலகின் வல்லரசாக நிமிர்ந்து நிற்கிறது பாரதம்.

பாரதம் கனடா இடையேயான சூழலை பார்க்கும் போது எல்லா நாடுகளும் பாரதத்தை பார்த்து பயம் கொள்ளலாம். அதன் காரணமாக கனடாவை தனிமைப்படுத்த முயற்சிக்கலாம் . ஆனால் நாங்கள் எப்போதும் பாரதத்தை பார்த்து பயப்படுபவர்கள் அல்ல. என்ற பொருள்படும்படியாக பாரதத்தை பார்த்து எப்போது பயம் கொள்ளாத ஒரே நாடு பாகிஸ்தான் தான். என்று பாகிஸ்தான் நாட்டு வெளியுறவுத் துறையின் செயலாளர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இவரின் இந்த கருத்தைக் கேட்டு பாகிஸ்தானில் இருக்கும் சொந்த நாட்டு குடிமக்களே தங்களின் அத்தனை உள்நாட்டு குழப்பங்களையும் நெருக்கடிகளையும் கடந்து மனம் விட்டு சிரிக்கிறார்கள் என்பதே எதார்த்த உண்மை. காரணம் எந்த நிமிடம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாரதத்துடன் இணைந்து விட்டோம் என்று அறிவிப்பு வெளிவருமோ? தெரியாது.

பலுசிஸ்தான் சிந்து பஞ்சாப் மாகாணங்கள் எப்போது தங்களை தனி நாடாக பிரகடனம் செய்து கொள்ளுமோ? தெரியாது. எப்படி காலிஸ்தான் பயங்கரவாதிகள் கனடா ஐரோப்பா அமெரிக்கா பிரிட்டன் வில்லன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மர்மமாக மரணிக்கிறார்களோ? அதே வழியில் கடந்த காலங்களிலும் சமகாலத்திலும் பாரதத்திற்கு உள்ளும் புறமும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பல்வேறு பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகிறார்கள் .இன்று வரை இதன் மர்மம் விலகவில்லை. இவ்வளவு கலவரங்களுக்கு இடையில் பாரதத்தை பார்த்து பயப்படாத ஒரே நாடு பாகிஸ்தான் தான் என்று வெளிப்படையாக பேசும் அளவில் தைரியமான ஒரு நபர் வெளியுறவுத்துறை செயலாளராக இருக்கிறாரே ? அதுவே பெருமைதான் என்ற நினைப்பில் கூட பாகிஸ்தான் மக்கள் சிரிக்கலாம்.

பாரதத்தின் மீது வன்மம் கொண்டு சீருடை அணிந்த ராணுவம் ஒரு பக்கம் நேரடி யுத்தம் சீருடை இல்லாத ராணுவமாக பயங்கரவாதிகளின் தூண்டுதல் என்ற பெயரில் மறைமுக யுத்தம் என்று கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் எல்லைக்கு உள்ளும் புறமும் பாகிஸ்தான் கட்டவிழ்த்து விட்ட பயங்கரவாதம் கொஞ்சம் நெஞ்சம் அல்ல. எத்தனையோ பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகள் உள்நாட்டில் ஸ்திரத்தின்மை இன்மை என்று எவ்வளவு இடர்கள் இருந்தாலும் ஒருபோதும் பாரதம் இதுவரையில் பாகிஸ்தானிடம் அடிபணிந்ததில்லை. ஒரு நிலைக்கு மேல் இறங்கி போய் சமாதானமும் பேசியதில்லை. ஆனால் காஷ்மீரை முன்வைத்து தொடங்கிய யுத்தங்களிலும் சரி எல்லைக்கு அப்பால் வந்து ஊடுருவி பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேற்றிய போதும் சரி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தற்காப்பு தாக்குதலை நிகழ்த்த தவறியதே இல்லை. அதிலும் சமீப காலமாக மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு முழுமையாக இந்திய ராணுவம் கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சூழலை பொறுத்து அவர்களை களத்தில் முடிவெடுத்து தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த காலங்களைப் போல அத்துமீறி துப்பாக்கிச் சூடு ஊடுருவி வந்து தாக்குதல் என்றெல்லாம் இப்போதைக்கு வாய்ப்பில்லை. காரணம் அடுத்த கணம் பாரதத்தின் துப்பாக்கிகள் வெடிக்கத் தொடங்கும். அதற்கும் முன்பாக உளவுத்துறை தகவல் பரிமாற்றம் காரணமாக திட்டமிடுபவர்களே தட்டி தூக்கப்படுவார்கள் என்ற நிலை தான் நீடிக்கிறது.

சர்ஜிகல் ஸ்டிரைக் என்றால் என்னவென்று உண்மையில் நாங்கள் பாரதத்திற்கு செய்து காட்டுவோம் என்று கொக்கரித்த ஒரு பயங்கரவாத தலைவன் அதே பாகிஸ்தானில் வைத்து கராச்சி நகரில் பட்ட பகலில் ஒரு சாலையின் சந்திப்பில் ஒரு பாகிஸ்தானியராலையே சுட்டுக் கொல்லப்பட்டான். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அல் குத்தூஸ் மசூதியில் தொழுகையின் போது அபு காசிம் காஷ்மீரி என்னும் ஒரு இந்திய காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த பயங்கரவாதி பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்து வாழ்ந்த காலத்தில் சக பாகிஸ்தானியரால் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். கடந்த காலங்களில் விமான கடத்தல் நாடாளுமன்ற தாக்குதல் மும்பை தாக்குதல் காஷ்மீரில் நடந்த பல்வேறு தாக்குதல்கள் பாரதம் முழுவதும் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு சம்பவங்களில் தொடர்புடைய பல்வேறு பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் துபாய் பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விபத்திலும் தனிமனித கொலைகளாகவும் மரணித்து வருகிறார்கள். ஆனால் இதுவரையில் அதற்கு பாகிஸ்தான் உளவுத்துறையும் காவல்துறையோ உரிய விசாரணை மேற்கொண்டதாக தகவலும் இல்லை. இவர்கள்தான் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டு வழக்கு பதிந்ததாகவோ சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டதாகவோ செய்திகளும் இல்லை.

உண்மையில் இதன் பின்னணி என்ன? என்பது பாகிஸ்தான் ராணுவத்திற்கும் உளவுத்துறைக்கும் தெரியாமல் இருக்காது. அவர்கள் சார்ந்திருக்கும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உளவுத்துறைக்கு நிச்சயம் ஏதேனும் ஒரு நுனி பிடிபட்டிருக்கும். அந்த வகையில் புலி வாலை பிடித்த கதையாக வம்பில் விழுந்து விடக்கூடாது என்று இந்த நிமிடம் வரை பாகிஸ்தானின் வெளியுறவுத் துறையும் பிரதமர் அலுவலகமும் அவர்களது நாட்டில் மரணம் அடையும் பயங்கரவாதிகள் பற்றிய மரணத்திற்கு வாயே திறக்காமல் கள்ள மவுனம் காத்து வருகிறது.

இன்று கனடாவாவது தங்களது நாட்டில் நடந்த ஒரு மரணத்திற்கு யார் காரணம்? என்று விசாரணையில் இறங்கி நீங்கள் தானா? என்று பாரதத்தை பார்த்து கேள்வியாவது கேட்டிருக்கிறது. அபாயகரமான குற்றச்சாட்டையாவது முன் வைத்து இருக்கிறது. ஆனால் கடந்த காலங்களில் பண மதிப்பிழப்பு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் முத்தலாக் உள்ளிட்ட விவகாரங்களில் கூட உள்நாட்டு விவகாரம் என்ற இங்கிதம் கூட இல்லாமல் வலிய வந்து கருத்து தெரிவித்த கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் அரசு இன்று அவர்கள் முழுமையாக சீராட்டி வளர்த்த காளீஸ் தான் பயங்கரவாதிகள் மரணத்திற்கு கனத்த மவுனம் காக்கிறது. மறுபக்கம் தங்களது சொந்த நாட்டிலேயே தங்களது பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் போதே விபத்தாகவும் தனிமனித கொலையாகவும் மரணிக்கும் பயங்கரவாதிகள் மரணத்திற்கும் வாய் திறந்து பேசாமல் கடந்து போகிறது. ஆனால் அந்த பாகிஸ்தான் சொல்கிறது உலகில் பாரதத்தைப் பார்த்து பயம் கொள்ளாத ஒரே நாடு பாகிஸ்தான் மட்டுமே என்று.

பாலக்கோடு தாக்குதலில் ஈடுபட்ட போது பாரதத்தின் விமான படையை சார்ந்த அபிநந்தன் வர்தமான் என்னும் ஒரு விமானி சாதாரண மிக் 21 என்ற ரஷ்ய விமானத்தை கையில் வைத்துக்கொண்டு அமெரிக்காவின் ஸ்ட்ரீட் பைட்டர் விமான ரகம் சார்ந்த பாகிஸ்தானின் விமானப்படை விமானத்தை நடுவானில் சுட்டு வீழ்த்தினார். துரதிருஷ்ட வசமாக தனது விமானமும் செயலிழந்து பாகிஸ்தான் மண்ணில் விழுந்தார். தனிமனிதனாக பாகிஸ்தானிடம் போர் கைதியாக சிறைப்பட்டவர் எந்த அச்சமும் பதட்டமின்றி இயல்பாக பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்கொண்டார். அவர்களின் விசாரணையின் போது கூட நீங்கள் கேட்பவற்றை கேட்கலாம் .ஆனால் நான் எதைச் சொல்ல வேண்டுமோ ? அதை மட்டுமே சொல்வேன். உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று நெஞ்சம் நிமிர்த்தி நின்றார்.

ஆனால் பிடிபட்டவர் ஒரு இந்திய விமானப்படை விமானி என்ற தெரிந்த மாத்திரத்தில் அங்கு சூழ்ந்து கொண்டிருக்கும் பொது மக்களும் அல்லது உள்ளூர் தீவிரவாதிகளோ அபிநந்தனை ஏதேனும் செய்துவிட்டால் அது தனது தேசத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று அஞ்சி அலறி அடித்து ஓடி அவரை பாதுகாப்பாக சிறை பிடித்து வந்து பாதுகாத்தது தான் பாகிஸ்தான் ராணுவம். அதை இன்றைய வெளியுறவுத்துறை அதிகாரி மறந்து விட்டார் போலும் . கைது செய்து வைத்திருக்கும் எங்களின் இந்திய விமான படை விமானியை 48 மணி நேரத்திற்குள் எப்படி கைது செய்தார்களோ ? அதே அரசு சம்பிரதாயங்களின்படி இந்திய எல்லையில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளின் வசம் அவரை பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விளைவுகள் விபரீதமாகும். எந்த ஒரு நாட்டின் தலையிட்டயோ சமரசம் முயற்சியையோ பாரதம் ஏற்றுக் கொள்ளாது என்று ஒற்றை தகவலின் மூலம் உலக நாடுகள் அத்தனையும் அபிநந்தனை பத்திரமாக விடுவிக்கும் படும்படி எச்சரித்தது. அதனைத் தொடர்ந்து மறுபேச்சு பேசாமல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ராணுவமும் பத்திரமாக அபிநந்தனை கொண்டு வந்து இந்திய எல்லையில் வாகா பகுதியில் பாரதத்தின் வெளியுறவுத் துறையிடம் முழு சம்பிரதாய அடிப்படையில் ஒப்படைத்து விட்டு வெளியேறியது.

சமீபமாக உள்நாட்டு நெருக்கடி காரணமாக பதவி இழக்க நேரிடும் போது கூட இம்ரான் கான் தான் பிரதமர் பதவியில் இருந்தபோது இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானில் விழுந்து சிறைப்பட்டார். அந்த நேரத்தில் பாரதத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் அபிநந்தனை பார்த்த இடத்திலேயே அடித்து கொன்றிருப்போம். உயிரோடு தீ வைத்து கொளுத்தி இருப்பார்கள் பாகிஸ்தானிய மக்கள். ஆனால் பாகிஸ்தானின் துரதிருஷ்டமும் பாரதத்தின் அதிர்ஷ்டமும் மோடி என்பவரை ஆட்சியில் அமர்த்தி இருந்தது. அதனால் வேறு வழியின்றி நாங்கள் அபிநந்தனை உயிரோடு பத்திரமாக திருப்பி அனுப்ப வேண்டிய நெருக்கடி எங்களுக்கு வந்தது என்று வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஒரு கொடுக்கப்பட்ட ஊடக பேட்டியிலேயே தெளிவாக தெரிவித்தார்.

இதே பாகிஸ்தான் அரசுதான் பலுசிஸ்தான் விடுதலைப் படை குழுக்கள் தொடங்கி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நாங்கள் பாரதத்தோடு இணையவிருக்கிறோம் என்று போராடும் குழுக்கள் வரை கட்டுப்படுத்தவும் முடியாமல் அடக்கவும் முடியாமல் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. பெரிய அளவில் நடவடிக்கை எடுத்தால் ராணுவத்திலும் காவல்துறையிலும் உயிர் சேதங்கள் நிகழும். மக்கள் பெருவாரியாக உள்நாட்டு குழப்பத்தில் ஈடுபட்டால் ராணுவத்திற்கும் காவல்துறைக்குமே உயிருக்கு உத்தரவாதம் இருக்காது என்ற நிலையில் தாங்கள் உயிர் பிழைத்தால் போதும். தங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருந்தால் போதும் என்ற நிலையில் தான் பாகிஸ்தானின் ராணுவமும் காவல்துறையும் உளவுத்துறையும் இந்த நிமிடம் வரை தப்பி பிழைத்து வருகிறது. ஆனால் உலகறிந்த ரகசியமான இவை அத்தனையும் தெரிந்த பிறகும் பாரதத்தை பார்த்து பயம் கொள்ளாத ஒரே நாடு பாகிஸ்தான் தான் என்று வெளிப்படையாக ஒரு வெளியுறவுத்துறை செயலாளர் பேசுவார் ஆனால் அவர்களது நாட்டின் இறையாண்மையும் ராணுவத்தின் கட்டமைப்பும் ராஜ்யப் பரிபாலனமும் எந்த நிலையில் இருக்கும்? என்பதை பார்ப்பவர்கள் கேட்பவர்கள் யூகித்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில் தனது தேசத்தின் இறையாண்மை பாதுகாப்பு என்று வரும்போது உலகின் வல்லரசு நாடுகளை கூட தனித்தே எதிர் கொள்ள தயாராக இருக்கும் பாரதத்தின் ராணுவமும் பாதுகாப்பும் உளவுத்துறையும் எந்த அளவில் ராஜ்ஜிய பலத்தோடு நிமிர்ந்து நிற்கிறது ? என்பதையும் இதன் மூலமே உணர்ந்து கொள்ள முடியும்.


Share it if you like it