விரைவில் இந்தியாவோடு இணைவது பாகிஸ்தானுக்கு நல்லது: யோகி ஆதித்யநாத் அதிரடி பேட்டி!

விரைவில் இந்தியாவோடு இணைவது பாகிஸ்தானுக்கு நல்லது: யோகி ஆதித்யநாத் அதிரடி பேட்டி!

Share it if you like it

பாகிஸ்தானுக்கென எந்தவொரு தனி அடையாளமும் இல்லை. ஆகவே, விரைவில் இந்தியாவோடு இணைத்துக் கொள்வது பாகிஸ்தானுக்கு நல்லது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாகக் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் பா.ஜ.க.வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத்திடம், தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது, ஹிந்து ராஷ்டிரம் குறித்து முதல்வர் யோகியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த யோகி ஆதித்யநாத், “முதலில் ஹிந்து ராஷ்டிரம் என்றால் என்ன என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஹிந்து என்பது ஒரு மதமோ, ஒரு பிரிவோ அல்ல. இது இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அனைத்து அர்த்தத்திலும் பொருந்தக்கூடிய ஒரு கலாசாரப் பெயர். மேலும், இது ஒவ்வோர் இந்தியருக்குமான கலாசார குடியுரிமை. இமயமலை முதல் கடல் வரை பரந்து விரிந்த இந்த நிலத்தில் பிறந்தவர்கள், தாங்களாகவே ஹிந்துக்கள் என்று அழைக்கப்படுவது நமது கலாசார ஒற்றுமை.

இந்தியாவில் இருந்து ஹஜ் செல்பவர்களை, அங்குள்ள அரபுக்கள், ஹிந்து என்றுதான் குறிப்பிடுகிறார்கள். ஒருவரும் ஹஜ் செல்பவர்களை ஹாஜியாக பார்ப்பதில்லை. ஒருவரும் இவர்களை இஸ்லாமியர்களாக ஏற்பதில்லை. இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பது புரியும். ஏனெனில், இங்குள்ள குடிமக்கள் எல்லோரும் ஹிந்துக்கள்தான். ஹிந்து என்பதை மதத்தோடவோ, நம்பிக்கையோடவோ, பிரிவோடவோ நாம் இணைக்கிறோம் என்றால், புரிந்துகொள்வதில் நாம் தவறு செய்கிறோம் என்று அர்த்தம். இதன் மூலம், ஹிந்து ராஷ்டிரத்தில் யாருக்கும் எந்தப் பிரச்னையும் வரக் கூடாது” என்றார்.

தொடர்ந்து, பாகிஸ்தான் நிலைமை குறித்த கேள்விக்கு பதிலளித்த யோகி ஆதித்யநாத், “ஆன்மிக உலகில் பாகிஸ்தானுக்கு உண்மையான தனி அடையாளம் என்று ஏதுமில்லை. தனக்கென எந்தவோர் உண்மையும் இல்லாமல். இதுவரை உயிர் பிழைத்திருப்பதே பாகிஸ்தானின் அதிர்ஷ்டம். ஆகவே, விரைவில் இந்தியாவுடன் தங்களை இணைத்துக்கொண்டால் பாகிஸ்தானுக்கு நல்லது. அகண்ட பாரதம் ஓர் உண்மை. எதிர்காலத்தில் அது நிகழும்” என்று குறிப்பிட்டார்.


Share it if you like it