மோடி இருந்தால் எதுவும் சாத்தியம்… பாராட்டும் ஆஸ்திரேலியா வாழ் பாகிஸ்தானியர்கள்!

மோடி இருந்தால் எதுவும் சாத்தியம்… பாராட்டும் ஆஸ்திரேலியா வாழ் பாகிஸ்தானியர்கள்!

Share it if you like it

பிரதமர் நரேந்திர மோடி இருந்தால் எதுவும் சாத்தியம் என்று ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் புகழாரம் சூட்டி இருக்கிறார்கள்.

பாரத பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருந்து வருகிறது. அதேபோல, உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பிடித்தமானவராக மோடி இருந்து வருகிறார். சமீபத்தில் நமது அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், செய்தியாளரிடம் மோடியை புகழ்ந்தும் பாராட்டியும் பேட்டியளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு ஏன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூட பாரத பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பலமுறை பாராட்டி இருக்கிறார்.

இந்த நிலையில்தான், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் பிரதமர் மோடியை பாராட்டி இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் அமைந்திருக்கும் புன்ஜில் அரண்மனையில் உலக நல்லெண்ணம் தொடர்பான நிகழ்ச்சிக்கு டெல்லி என்.ஐ.டி. அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இதுகுறித்து லாகூரைச் சேர்ந்த டாக்டர் தாரிக் பட் (அகமதியா முஸ்லிம் கம்யூனிட்டி) கூறுகையில், “அனைத்து சமூகங்களையும் மதிக்கும் திறன் படைத்தவராக இந்தியப் பிரதமர் மோடி இருக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானோர் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இங்கு ஒருங்கிணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளில் நாங்களும் அங்கம் வகித்து வருகிறோம். இந்திய முஸ்லிம்களுக்கும், பாகிஸ்தானிய முஸ்லிம்களுக்கும் இடையே தற்போது அதிக தொடர்பு இருப்பதாக நினைக்கிறேன். வேறுபாடுகளை விட பொதுவானவற்றைக் கொண்டுவர விரும்புகிறோம்.

பிரதமர் மோடி இருந்தால் எதுவும் சாத்தியம். தற்போது நடைபெறும் இந்நிகழ்ச்சி ஹிந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து வருவதற்கான ஒரு சிறந்த முன்முயற்சியாக அமைந்திருக்கிறது. நல்லிணக்கம் மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்காக சமூகங்களை ஊக்குவிப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சரியானதைச் செய்து வருகிறார். மக்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் பிரதமர் மோடியைப் பின்பற்றும் கவர்ச்சியை கொண்டிருக்கிறார்” என்றார். இதேபோல், பாகிஸ்தானியர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டினார்கள்.


Share it if you like it