இந்தியாவில் போதைப் பொருள் கடத்தி அதன் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்ய பாகிஸ்தான் முயல்வதாக இந்தியா குற்றம் சாட்டியிருக்கிறது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நாடு பாகிஸ்தான். அந்த வகையில், தங்களுக்கு நிதியுதவி அளிக்குமாறு பல்வேறு நாடுகளிடம் தொடர்ந்து கெஞ்சி வருகிறது. கடுமையான நிதி நெருக்கடி மற்றும் உணவுத் தட்டுப்பாட்டால் பாகிஸ்தான் தவித்து வருகிறது. இந்த நிலையிலும் கூட, காஷ்மீரில் தீவிரவாதத்தைத் தூண்டி விடும் வகையில் அந்நாடு செயல்பட்டு வருவதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதாவது, ராணுவத்திற்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கோட்டு அருகே உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனையை இந்திய ராணுவம் நடத்தியிருக்கிறது. அப்போது, ஏழு கிலோ ஹெராயின், இரண்டு கோடி ரூபாய் ரொக்கம், 15,000 அமெரிக்க டாலர்கள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து, வீட்டில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட பிறகு இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.
வெளிநாடுகளில் பிச்சையெடுத்தும், இந்தியாவில் போதைப் பொருட்களை கடத்தியும், அதன்மூலம் காஷ்மீரில் தீவிரவாதத்தை வளர்க்க துடிக்கும் பிச்சைகார நாட்டிற்கு இந்தியா உதவி செய்ய கூடாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.