இந்தியாவை மேற்கோள் காட்டி பாக்., மிரட்டிய ஆப்கான்!

இந்தியாவை மேற்கோள் காட்டி பாக்., மிரட்டிய ஆப்கான்!

Share it if you like it

இந்தியாவிடம் சரண் அடைந்தது போன்ற நிலை ஏற்படும் என பாகிஸ்தானை அதன் அண்டைநாடான ஆப்கான் மிரட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1991-ம் ஆண்டு அமெரிக்காவால் நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டவர்கள் தாலிபான்கள். இவர்கள், கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். ஆப்கான் தாலிபன்கள் கட்டுப்பாட்டில் வந்த பிறகு அந்நாட்டிற்கு முதன் முதலாக ஆதரவு கரம் நீட்டிய நாடு பாகிஸ்தான். இதனை தொடர்ந்து, மற்ற நாடுகள் ஆப்கானுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது.

தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததால் இவர்கள் மூலம் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்கலாம் என பாகிஸ்தான் கருதியது. நமக்கு கிடைத்திருக்கும் ( தாலிபான்கள் ) அடிமையின் வாயிலாக காஷ்மீரில் தொடர்ந்து தொல்லை கொடுக்கலாம் என பாகிஸ்தான் கற்பனை உலகில் மிதந்து வந்தது.

இப்படிப்பட்ட சூழலில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் இடையே நீண்ட காலமாக இருந்து வந்த எல்லை பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இதனை தொடர்ந்து, இரு நாடுகளும் எல்லையில் தொடர்ந்து மோதி கொண்டன. தாலிபன்கள் பாகிஸ்தானையும் தங்கள் வசமாக்குவதற்காக தெஹ்ரிக் இ தாலிபான் எனும் குழுவை அமைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல்களை நிகழ்த்தி வந்தனர். இதனை தொடர்ந்து, பாகிஸ்தானும் தெஹ்ரிக் இ தாலிபன்களுக்கும் போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கடந்த ஆண்டு, இந்த ஒப்பந்தத்திலிருந்து தாலிபன்கள் வெளியேறினர். இதையடுத்து, தாலிபன்கள் – பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தாலிபன்கள் பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அந்த வகையில், தாலிபன்களின் மூத்த தலைவர் அகமது யாசிர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் யுத்தத்தின்போது இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்து, ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் படத்தைப் பகிர்ந்து, ” எத்தனையோ சாம்ராஜ்யங்களின் புதைகுழியாக ஆப்கானிஸ்தான் இருந்திருக்கிறது என எச்சரிக்கை விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it