ஹிந்து சிறுமி கடத்தல்… கட்டாய மதமாற்றம்… திருமணம்..!

ஹிந்து சிறுமி கடத்தல்… கட்டாய மதமாற்றம்… திருமணம்..!

Share it if you like it

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமியை கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்து, திருமணம் செய்த விவகாரம், ஹிந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, மாஜி அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் வீட்டிற்கு முன்பு போராட்டம் நடத்தி, இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கடத்தப்பட்ட ஹிந்து சிறுமியை விடுவிக்க வேண்டும் என்று ஹிந்துக்கள் வலியுறுத்தினர்.

பாகிஸ்தானில் மைனாரிட்டி சமுதாயமான ஹிந்துக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, ஹிந்து சிறுமிகளை கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்து, திருமணம் செய்வது அதிகளவில் அரங்கேறி வருகிறது. இச்சம்பவங்கள் பெரும்பான்மை சமுதாயமான இஸ்லாமியர்கள் சம்மதத்துடனேயே அரங்கேறி வருவதுதான் வேதனைக்குரிய விஷயம். அந்த வகையில், நவாஷாஹரில் 16 வயதுடைய ஹிந்து சிறுமியை கடத்திச் சென்று, வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து, முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்து வைத்திருக்கும் சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகேயுள்ள, அகமது நகரின் உன்னார் பகுதியைச் சேர்ந்தவர் சந்தர்மால். இவரது மகள் சோனா (பெயர் மாற்றம்). ஹிந்து சிறுமியான இவரை, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மீர் முகமது கிராமத்தைச் சேர்ந்த கலீல் ரஹ்மான் என்பவர், கடந்த வாரம் கடத்திச் சென்று விட்டார். பின்னர், அச்சிறுமியை கட்டாய மதமாற்றம் செய்து, திருமணமும் செய்து கொண்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சோனாவின் பெற்றோருடன், உறவினர்களும், ஹிந்துக்களும், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் வீட்டிற்கு முன்பு திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது, இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, கடத்தப்பட்ட ஹிந்து சிறுமியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

பின்னர், இதுகுறித்து சுந்தர்மால் அளித்த புகாரின் பேரில், கலீல் ரஹ்மான் மற்றும் அவரது தந்தை அஸ்கர் ஜோனோ ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அஸ்கர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், விரைவில் சிந்து உயர் நீதிமன்றத்தில் சோனா ஆஜர்படுத்தப்படுவார் என்றும், அங்கு அவள் யாருடன் இருக்க விரும்புகிறாள் என்று கேட்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். அதேசமயம், ஹிந்து பஞ்சாயத்தைச் சேர்ந்த லஜ்பத் ராயோ, போலீஸார் வழக்குப் பதிவு செய்தும், கடத்தப்பட்ட சிறுமியை விடுவிக்கவில்லை என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.

பாகிஸ்தான் ஹிந்துக்களுக்கு எப்போதுதான் விடிவு கிடைக்குமோ?!


Share it if you like it