பாகிஸ்தான் உளவாளி பெண் ஃபரிதா மாலிக் கைது!

பாகிஸ்தான் உளவாளி பெண் ஃபரிதா மாலிக் கைது!

Share it if you like it

பாகிஸ்தான் உளவாளியான ஃபரிதா மாலிக் என்கிற பெண் நேபாள எல்லையில் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். காரணம், நேபாள் மற்றும் வங்கதேசத்துடன் நீண்ட தூர எல்லையைக் கொண்டது. ஆகவே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் போலவே இம்மாவட்டத்திலும் ஊடுருவல்காரர்களை தடுக்கும் வகையில், பாதுகாப்பு பலமாக இருக்கும். இந்த சூழலில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஃபரிதா மாலிக் என்கிற சனா அக்தர், கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் ஊடுருவி, அப்பகுதி மக்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு, பல்வேறு தகவல்களை சேகரித்து வந்திருக்கிறார். இத்தகவல் பாதுகாப்புப் படையினருக்கு தெரியவரவே, ஃபரிதா மாலிக்கை கைது செய்தனர்.

இவர், இவ்வாறு ஊடுருவி கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே, கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இவர் ஊடுருவியபோது, 5 புலனாய்வு அமைப்புகள் இவரிடம் விசாரணை செய்தன. அப்போது, தான் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்று கூறியிருக்கிறார். ஆகவே, இவர் பாகிஸ்தானியரா அல்லது அமெரிக்கரா என்பது பெரும் குழப்பமாகவே இருந்து வருகிறது. அதேசமயம், இவர் எதற்காக இந்தியாவுக்கு வந்தார் என்கிற நோக்கம் பற்றியோ, எந்த வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவினார் என்பது பற்றியோ வாய் திறக்கவில்லை. போலீஸாரும், புலனாய்வு அமைப்பினரும் நடத்திய விசாரணையில், முன்னுக்குப்பின் முரணாகவே பதிலளித்திருக்கிறார்.

இதனிடையே, ஃபரிதா மாலிக், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த இத்ரீஸ் என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, ஃபரிதா மாலிக்கிடம் ​​பீகார் காவல்துறை, சேஷதர் சீமாபுல், ஐ.பி., வெளியுறவு அமைச்சகம் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஃபரிதாவிடமிருந்த போலி ஆவணங்களையும் போலீஸார் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த போலி ஆவணங்களை உருவாக்க ஃபரிதாவுக்கு உதவியவர்கள் யார்? எந்த வழியாக இந்தியா – நேபாள எல்லையில் ஊடுருவி கிஷன்கஞ்ச் பகுதிக்கு வந்தடைந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.


Share it if you like it