தமிழக நிதியமைச்சர் கடந்த ஒரு வருடத்திற்குள் எவ்வளவு கடன் சுமையை தமிழக மக்கள் மீது ஏற்றி இருக்கார் தெரியுமா? என பிரபல அரசியல் விமர்சகர் மாரிதாஸ் பகீர் தகவலை வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. ஆட்சி தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மக்களின் வரிப்பணம் பல வகையிலும் வீணடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டில், உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ 2,00,000-க்கும் மேல் கடன் இருப்பதாக தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தான், 2,500 கோடியில் சென்னையில் பூங்கா. 100 கோடி-யில் ஈ.வெ.ரா-விற்கு சிலை, 39 கோடியில் கலைஞருக்கு நினைவிடம், எழுதாத பேனாவிற்கு 80 கோடி என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை விடியல் ஆட்சி வெளியிட்டு இருந்தன.
இதுஒருபுறம் இருக்க, சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்ப் பலகைகள் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யும் விதமாக ரூ.8.43 கோடி நிதியை சென்னை மாநகராட்சி அண்மையில் தனது பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து இருந்தது. இதுபோன்ற, பயனற்ற திட்டங்களை அறிவிக்க தான் முதல்வருக்கு 5 பொருளாதார நிபுணர்களா? என்று பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். இதனிடையே, மின் கட்டண உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு மற்றும் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு என பொதுமக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் தான், பிரபல எழுத்தாளர் மாரிதாஸ், மக்கள் சார்பாக நான் கேட்கிறேன். 2,00,000 லட்சம் கோடி தமிழக மக்களை அடமானம் வைத்து வாங்கி இருக்கிறிர்கள். அதில், 15% சதவீதம் என்று கூட வைத்தால், 30,000 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை தி.மு.க. குடும்பம் மற்றும் அமைச்சர் குடும்பம் கொள்ளையடித்து இருக்கும். கொள்ளையடிக்க ஒரு அரசாங்கம், அந்த கடனை வைத்து அரசாங்கத்தை தி.மு.க. அரசு நடத்தி கொண்டு இருக்கிறது என காட்டமான முறையில் பேசி இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் மீது பெரும் கடன் சுமையை ஏற்றி விட்டு, எங்க தாத்தா யாரு தெரியுமா? எங்க அப்பா யாரு தெரியுமா? என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலர் கலரா ரீல் விடுவதை விட்டுவிட்டு தனது பணியினை சரியாக மேற்கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.