திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பிரசன்ன விநாயகர்கோவில் தெருவின் பெயரை மாற்றிய மாநகராட்சி.
திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் வ.உ.சி மைதானம் பின்புறமுள்ள தெரு பன்நெடுங்காலமாக அந்த தெருவில் உள்ள பிரசன்ன விநாயகர் கோவில் பெயரால் பிரசன்ன விநாயகர் கோவில் தெரு என அழைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது அந்த தெருவின் பெயரை திருநெல்வேலி மாநகராட்சியால் நிறுவப்பட்டுள்ள பெயர் பலகையில் உணவு சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெயர் பலகை நிறுவப்பட்டுள்ளதற்கு அருகிலுள்ள வீட்டின் வாசலில் பிரசன்ன விநாயகர் கோவில் தெரு என கல்வெட்டு ஒன்று பதிக்கப்பட்டுள்ளது. அதை கூட அறியாமல் திருக்கோவில் பெயரை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் உணவுசாலை என்று பெயரிடடுள்ளதை பாளையங்கோட்டை பகுதி வாழ் இந்து மக்கள் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்து உள்ளனர்.
சாலையோர உணவு வண்டிகள் அதிகமாக அந்த சாலையில் நிறுத்தப்பட்டுள்ளதால் உணவு தெரு என மாநகராட்சி பெயரிடுவது சாலையோர உணவு வகைகளை மாநகராட்சி நிர்வாகமே ஊக்குவிப்பது போல் அமைந்துள்ளது. மாநகராட்சி உயர் அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டு கொண்டு உள்ளது.
கோவில்கள் மீது ஆதிக்கம், தொடர்ந்து கோவில்கள் தாக்கப்படுவது, என விடியல் ஆட்சியில் ஆலயங்களுக்கு எதிராக நிகழும் சோகங்கள் ஒருபுறம் என்றால் தற்பொழுது தெருவின் பெயரை மாற்ற திருநெல்வேலி மாநகராட்சி முயன்று உள்ளதாக பலர் கருத்துதெரிவித்து வருகின்றனர்.