பாகிஸ்தானின் ‘போதை’ ட்ரோன் டுமீல்… டுமீல்..!

பாகிஸ்தானின் ‘போதை’ ட்ரோன் டுமீல்… டுமீல்..!

Share it if you like it

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சர்வதேச எல்லைக்கு அருகே இந்திய பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டின் போதை ட்ரோனை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

நமது நாட்டுக்கும் பாகிஸ்தான் நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு நமது ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அதேசமயம், நமது நாட்டில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் ஆயுதங்களையும், போதைப் பொருட்களையும் கடத்தி வருகிறார்கள். இதுபோன்ற குட்டி விமானங்கள் நமது எல்லைக்குள் ஊடுருவும்போது எல்லை பாதுகாப்புப் படை வீரர்களால் அவ்வப்போது சுட்டு வீழ்த்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அமிர்தசரஸ் மாவட்டத்தின் தனோய் குர்த் கிராமத்தில் நேற்று இரவு 8.50 மணியளவில் வானில் வினோத சத்தம் கேட்டது. உஷரான எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், உற்று கவனித்தபோது ஆளில்லா ட்ரோன் ஒன்று பறந்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ட்ரோனை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இத்தகவலை எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி தெரிவித்திருக்கிறார். மேலும், சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன், பாகிஸ்தானில் இருந்து வந்ததாகவும், அந்த கறுப்பு நிற ட்ரோன் நீண்ட தேடுதலுக்குப் பிறகு ஒரு வயலில் இருந்து ஒரு பையுடன் மீட்கப்பட்டதாகவும், அப்பையில் 2.70 கிலோ கிராம் போதைப் பொருள் இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it