40 ஏக்கர் நிலத்தை அபகரித்தது தெரியாதா? ராகுல்காந்திக்கு ஸ்மிருதி இரானி பதிலடி!

40 ஏக்கர் நிலத்தை அபகரித்தது தெரியாதா? ராகுல்காந்திக்கு ஸ்மிருதி இரானி பதிலடி!

Share it if you like it

பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன், தொழிலதிபர் அதானியை இணைத்து பேசிய சுமத்திய ராகுல் காந்திக்கு, ஏழை மக்களுக்கு மருத்துக் கல்லூரி கட்டப்போவதாகக் கூறி, 40 ஏக்கர் நிலத்தை அவரது குடும்பம் அபகரித்து விருந்தினர் மாளிகை கட்டிக் கொண்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பதிலடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 31-ம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. தற்போது, ஜனாபதி உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, தொழிலதிபர் அதானியையும், பாரத பிரதமர் மோடியையும் இணைத்து பேசினார். குறிப்பாக, 2014-ம் ஆண்டுக்கு முன்பாக 609-வது இடத்தில் இருந்த அதானி, 2023-ம் ஆண்டில் எப்படி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறினார் என்று கேள்வி எழுப்பியதோடு, அதானியும், மோடியும் ஒரே விமானத்தில் பறக்கும் காட்சி கொண்ட போட்டோவையும் நாடாளுமன்றத்தில் காட்டினார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “1981-ம் ஆண்டு அமேதியில் உள்ள 40 ஏக்கர் நிலத்தை ஒரு அறக்கட்டளை (சோனியா காந்தியின் அறக்கட்டளை) வெறும் 623 ரூபாய்க்கு வாடகைக்கு கைப்பற்றியது. அந்த இடத்தில் அமேதியில் உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவக் கல்லூரி கட்டப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த நிலத்தில் அக்குடும்பம் தங்களுக்கென ஒரு விருந்தினர் மாளிகையை கட்டிக் கொண்டது. மேலும், நோயால் பாதிக்கப்பட்ட நன்ஹே லால் மிஸ்ரா என்ற நபர், மோடி அரசின் ஆயுஷ்மான் பாரத் அட்டையை கையில் வைத்திருந்ததால், அந்த குடும்பத்துக்கு (ராகுல் காந்தி குடும்பம்) சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்டது. அநியாயமாக ஒரு மனிதரை கொன்று விட்டார்கள்.

இவர்கள்தான் நரேந்திர மோடியைத் தாக்கி பேசியதோடு, அவரை பார்த்து ஏளனமும் செய்தார்கள். சிறுபான்மையினரின் காவலர்கள் நாங்கள்தான் என்று காங்கிரஸார் கூறுகின்றனர். இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு ‘ஹஜ்’ விண்ணப்பத்திற்கும் பணம் எடுக்கப்பட்டது, ஆனால், மோடி அரசாங்கம் முதல்முறையாக, ஏழை முஸ்லிம்கள் விண்ணப்பப் படிவத்திற்கான தொகையை செலுத்த வேண்டியதில்லை என்று ஒரு கொள்கையை கொண்டு வந்தது. இது ‘ஹஜ் யாத்ரா’ செலவை 50,000 ரூபாயாக குறைக்கும். தவிர, 21,000 சிறுபான்மை மாணவர்களுக்கு 280 கோடி ரூபாய்க்கும் மேல் வழங்கி இருக்கிறோம்” என்று கூறி ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.


Share it if you like it