2024 நாடாளுமன்ற தேர்தல்: அண்ணாமலை புதிய வியூகம்!

2024 நாடாளுமன்ற தேர்தல்: அண்ணாமலை புதிய வியூகம்!

Share it if you like it

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் வகையில், புதிய வியூகத்தை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வகுத்துள்ளதாக பிரபல இணையதள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தற்பொழுது கடும் சவாலாக இருக்கும் ஒரே கட்சி பா.ஜ.க என்பது பல அரசியல் நோக்கர்களின் கருத்து. அவர்களின் கருத்தை மெய்ப்பிக்கும் வகையில், இன்று வரை அண்ணாமலை அதிரடி அரசியலை செய்து வருகிறார். இவர், தமிழக பா.ஜ.க தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு, அக்கட்சி தமிழகத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்பது நிதர்சனம். சிறந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல் மற்றும் இவர் ஒரு இளம் தலைவர் என்பது கூடும் பலம். இதன் காரணமாக, இளைஞர்கள் பா.ஜ.க.வை நோக்கி நகரும் சூழல் உருவாகியுள்ளது.

எதிர்க்கட்சி அ.தி.மு.க.வா அல்லது பா.ஜ.க.வா என்று மக்கள் கேள்வி எழுப்பும் அளவிற்கு இவரது அரசியல் பணி அமைந்துள்ளது. இவரின், இந்த அதிரடி நடவடிக்கை ஆளும் தி. மு.க அரசிற்கு கடும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனம். சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 323 இடங்களில் அக்கட்சி அமோக வெற்றி பெற்றது. மேலும், தமிழகத்தின் 3-வது பெரிய கட்சி என்கிற அந்தஸ்த்தை பா.ஜ.க. பெற்றிருக்கிறது. இதன் மூலம், தமிழகத்தில் தாமரை மலராது என்று சவால் விட்டவர்களின் முகத்தில் அக்கட்சி கரியை பூசியுள்ளது

தமிழகத்தைப் பொறுத்தவரை, பாரத பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்தே பா.ஜ.க. மீதான வெறுப்பை உமிழ்ந்து வருகின்றன திராவிட இயக்கங்கள். குறிப்பாக, தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்றி விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வந்தன. இதற்கு, இங்குள்ள சில அடிமை ஊடகங்களும் துணையாக இருந்து வருகின்றன. இதனையெல்லாம் தாண்டி தமிழகத்தில் பா.ஜ.க வெற்றி நடைபோட்டு வருகிறது.

இந்நிலையில், எதிர்வருகின்ற 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று அரசியலை உற்று நோக்கி வரும் நிபுணர்களின் கருத்து. அந்தவகையில், தமிழ்நாடு – புதுவையை சேர்த்து 40 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது. இதில், பா.ஜ.க.,விற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளை இனம் கண்டு வெற்றி பெறுவதற்கான களபணி தற்பொழுது தீவிரமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், பா.ம.க.வில். உள்ள பல முக்கிய புள்ளிகள் பா.ஜ.க.வை நோக்கி நகர்வதற்கான புதிய வியூகத்தை அண்ணாமலை வகுத்துள்ளார் என பிரபல இணையதள ஊடகமான தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் லிங்க் இதோ.


Share it if you like it