அப்பாவி கிறிஸ்தவ மக்களிடம் பணக்காரன் ஆசையை தூண்டி அதன் மூலம் ஆதாயம் அடைய முயலும் கிறிஸ்தவ பாதிரியாரின் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அக்காணொளியில் பாதிரியார் கூறியதாவது ;
கிறிஸ்தவர் ஒருவர் தனது குழந்தைகளுக்கான படிப்பு செலவு மற்றும் அவரது சேமிப்பு அனைத்தையும் சேர்த்து ( பத்து லட்சம் ) வைத்திருந்தார். ஆனால், அவர் அந்த தொகை தனக்கு போதவில்லை என்று கூறிவந்தார். இதனிடையே, ஒன்றரை மாதத்தில் அவரது சொத்தை ஆண்டவர் ரூ. 1.50 கோடி மதிப்புள்ள சொத்தாக திருப்பி கொடுத்து இருக்கிறார்.
அவர், கொடுத்தது வெறும் ரூ. 10 லட்சம். அவர், பெற்று கொண்டது அதனை விட பத்து மடங்கு. சிறந்த முதலீடு எது தெரியுமா? வங்கி அல்ல தேவராஜியம். ஜெபம் செய்து பார்த்து விட்டேன். உண்ணாவிரதம் இருந்து பார்த்து விட்டேன். எனது, பண சிக்கல் தீரவே மாட்டேன் என்கிறது பாஸ்டர் என்று கூறியிருக்கிறார்கள்.
நான் அவர்களுக்கு சொல்வது என்னவென்றால், ஜெபம் மட்டும் போதாது. உண்ணாவிரதம் மட்டும் போதாது. பணத்தை விதைக்க வேண்டும். அதாவது, முதலீடு செய்ய வேண்டும் என அந்த பாதிரியார் கூறியிருக்கிறார்.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அப்பாவி கிறிஸ்தவ மக்களிடம், பேராசையை தூண்டி அதன்மூலம் ஆதாயம் தேட இந்த பாதிரியார் சூழ்ச்சி செய்ய முயல்கிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரே நாளில் கோடிஸ்வரனாக மாறுவது எப்படி? என்று அப்பாவி மக்களை நடிகர் வடிவேலு ஏமாற்ற முயற்சி செய்வார். அந்த நகைச்சுவை காட்சியை நினைவுப்படுத்துவது போல இவரது பேச்சு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/https://www.facebook.com/watch/?v=766536177447070