சேவையின் சிகரம் மதுரை வைத்தியநாத ஐயர்

சேவையின் சிகரம் மதுரை வைத்தியநாத ஐயர்

Share it if you like it

சேவையின் சிகரம் மதுரை வைத்தியநாத ஐயர்


துணிச்சல், தூய்மை, அறிவு, ஆற்றல், தேசபக்தி தெய்வபக்தி , பொறுமை,தொண்டு ,ஹரிஜன தொண்டு என்று வாழ்ந்த காந்தியவாதி தேசபக்த பிராமணன் வைத்தியநாத அய்யர் ஐயர் 23/2/1955 இரவு 10மணிக்கு இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நினைவு நாளன்று அவர்தம் தொண்டைப் போற்றி வணங்குவோம்
சுதந்திரப் போராட்டத்தில் அந்தணர்கள் –10- சேவையின் சிகரம் வைத்தியநாத ஐயர்.


மதுரையில் எங்கு தீப்பிடித்தாலும் தீயணைக்கும் வாகனத்துக்கு முன்னே இருப்பார் , வெள்ளம் வந்தாலும் மக்களை மீட்க முதலில் வருவார் , தொழிலாளர் பிரச்சனை என்றாலும் இவரது வாக்குக்கு மரியாதை தொழிலாளிகளிடமும் , முதலாளிகளிடமும் உண்டு . பிரச்சனையைத் தீர்க்க ஓடோடி வந்த அந்த நல்ல உள்ளத்துக்குச் சொந்தக்காரர் ஸ்ரீ வைத்தியநாத ஐயர்.


1932 முதல் 1942 வரை நாட்டில் நடைபெற்ற தேஸியப் போராட்டங்களுக்கு ஆட்களைத் திரட்டி தேசிய உணர்ச்சியை உண்டாக்கி அமைப்புகளை உருவாக்கிய தலைமைப் பண்பு கொண்டவர். நெற்றியில் திரு நீறு சிவ பக்தனைப்போன்ற தோற்றம் அமைதியான முகம் , கதராடையுடன் பார்ப்பவர்களுக்கு பக்தியை உண்டாக்கும் திரு உரு .
ஜாதி பேதம் அற்றுக் கல்விக்கட்டணம் செலுத்துவது முதல் கதர் ஆடை உபயம் வரை ஏழை மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற அந்த அந்தணர் பெயர் வைத்தியநாத ஐயர் . தேசப்பணியில் தமுக்கடிப்பது முதல் தலைமை ஏற்பதுவரை அத்துணை பணியையும்செய்த அந்தணர்.


1890 இல் புதுக்கோட்டையில் அருணாசலம் அய்யருக்கும் , லக்ஷ்மி அம்மையாருக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவர். 3 ஸஹோதரர்கள் 4 சகோதரிகள் தந்தை புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் கணித ஆசிரியர் ஒய்வு பெற்றபின் மதுரைக்கு மாற்றம். வைத்தியநாத அய்யர் மதுரைக் கல்லூரியிலும் , பிரசிடன்சி கல்லூரியிலும் படித்தவர் , திருச்சி எஸ் பி ஜி ஹைஸ்கூல், மசூலிப்பட்டினம் ஹிந்து ஹைஸ்கூலில் ஆசிரியர் பணி . 1912இல் வக்கீல் தொழிலை ஆரம்பித்தார் .
1922இல் வெற்றிகரமான வக்கில் என்று பெயர் பெற்றிருந்தும் தேசத்துக்கு ஸேவை செய்யத் தொடங்கிய ஐயர். கதர் ஆடை நூற்பதை புகழ் பெற்ற வக்கீலாக இருக்கும் போதிருந்தே தொடங்கியவர் . பாரதியின் பாடல்கள்தான் தன்னை தேஸ சேவைக்கு இழுத்தது என்கிறார் ஐயர்.


கள்ளுக்கடை மறியலின்போது ஒருமுறை கள்ளுக்குடத்தை ஐயரின் தலையில் போட்டு உடைத்து “கள்ளபிஷேகம்” செய்தபோது தொண்டர்கள் கொந்தளித்தனர் ,ஐயரோ அமைதிகாத்தார் தொண்டர்களை அமைதிகாக்கவும் சொன்னார்.


வெள்ளலூரில் நாட்டார் சமுதாய மக்களிடம் கள் குடிக்க வேண்டாம் என்று பிரசாரம் செய்ய சென்றார் ஐயர் . அங்கு உள்ள சமுதாயத் தலைவர்கள் முன்னே பேச வேண்டுமென்றால் சட்டையைக் கழற்றி விட்டு இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு நின்றபடி பேசவேண்டும்.


ஐயருக்கு அந்தக் கட்டுப்பாட்டை ஸமூஹத்தலைவர்கள் வலியுறுத்தவில்லை. ஆனாலும் ஐயர் சட்டையைக் கழற்றினார் இடுப்பில் துண்டுகட்டினார். காரணம் எப்படியாவது நாட்டார் ஸமுதாயத் தலைவர்கள் மத்தியில் மனமாற்றம் உண்டாக்கி கள் குடிக்கும் பழக்கத்தைக் கைவிடுமாறு அவர்களது ஸமுதாய மக்களுக்கு ஓலை அனுப்பவேண்டும் என்று வலியுறுத்தினார்.


ஒருமணி நேரம் ஐயர் குரல் ஒலித்தது. சுருட்டு , பீடி கஞ்சா , அபின் புகையிலை, கள் என்று எவரும் போதை வஸ்துக்களை உபயோகிக்கக் கூடாது என்று ஸமுதாயத் தலைவர்கள் தங்கள் சமூக மக்களுக்கு ஓலை அனுப்பினார்கள்.


1937இல் ஹரிஜன ஆலய பிரவேசத்துக்குத் தனது உடல் பொருள் ஆவி மூன்றையும் அற்பணிக்க ஆயத்தமானார் ஐயர். இதில் தன்னை எதிர்த்த தனக்கு வக்கீல் தொழில் கற்றுத் தந்த குரு என். நடேச ஐயரையே எதிர்த்தார். வழக்குத் தொடுத்து வாதாடினார் குரு சிஷ்யப் போராட்டமாகவே அது இருந்தது.
1937 -ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஹரிஜன அன்பருடன் ஆலயப் பிரவேசம் கண்டார் வைத்தியநாத ஐயர். ஆலயப் பிரவேசம் செய்தவர்களை சிறைக்கு அனுப்பும் முறையைத் தடுக்க ஆலய பிரவேசத்தைச் சட்டமாகினார் ராஜாஜி.


1934 – ல் தேர்தலில் ஸ்ரீ ராஜாஜி, பட்டேல் போன்றோரின் வறுப்புறுதலில் சட்டசபைத் தேர்தலில் வென்றார். 1937 இல் மந்திரி பதவி.
1930 உப்பு சத்தியாகிரகத்தில் தடையை மீறி அதற்காக 6 மாத சிறை. 1932சட்ட மறுப்பு போராட்டத்தில் திலகர் சதுக்கத்தில் பேசியதன் மூலம் ஒரு வருஷ சிறை , விடுதலையான பின்பு வக்கில் தொழிலுக்கு தொல்லை அளித்தது ஆங்கில அரசு . 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஆறுமாத சிறை.
வேதாரண்யம் கஸ்தூரிபா குருகுலத்தில் அன்னபூர்ணா விடுதித் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பின் சிகிச்சைக்காக சென்னை சென்றபோது , துணிச்சல், தூய்மை, அறிவு, ஆற்றல், தேசபக்தி தெய்வபக்தி , பொறுமை,தொண்டு ,ஹரிஜன தொண்டு என்று வாழ்ந்த காந்தியவாதி தேசபக்த பிராமணன் வைத்தியநாத அய்யர் ஐயர் 23/2/1955 இரவு 10மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.


மதுரை தினமணி அலுவலகத்திலிருந்து ஐயரின் இறுதி ஊர்வலம் துவங்கியது ஹரிஜன மக்களுக்கு உழைத்த ஐயரின் இறுதிப்பயணத்தில் திருக்குல சமுதாய மக்களின் (ஹரிஜனங்கள்) திரள் இருந்தது. ஒருமைல் தூர மக்கள் கூட்டம், இரண்டு மணிநேரம் நீண்டது இறுதியாத்ரை .
ஐயரின் மனைவி ஸ்ரீமதி அகிலாண்டம்மையார் கைத்தறி கொண்டு நூல் நூற்பது, ஹிந்தி வகுப்பு நடத்துவது , ஹரிஜன மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று தொண்டு செய்வது என்று ஐயரின் பணிகளில் துணை நின்ற துணைவி, 1932இல் ஐயர் சிறை சென்றபோது தானும் அந்நியத் துணிகளை விற்கும் கடைகளை மறிக்கும் ஜவுளிக்கடை மறியல் செய்து சிறை சென்றார். 1942 இல் சட்டமறுப்பு இயக்கத்தில் சிறை.


ஐயரின் மகன் சங்கரன் சட்டக்கல்லூரியில் படித்தபோது காந்திய இயக்கத்தில் பங்கு பெற ஆறு மாத சிறை சென்றவர். ஐயரின் இளைய ஸஹோதரர் எ. சுப்ரமணிய ஐயர் பள்ளி ஆசிரியராக இருந்தவர் 1923 இல் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் பங்கு பெற்று ஒரு வருஷ சிறைத் தண்டனை பெற்றார்.


தேசத்துக்கு உழைத்த குடும்பம் என்ற பெருமைக்குரியது மதுரை வைத்தியநாத ஐயரின் குடும்பம். ஹரிஜனங்கள் ஆலயத்துக்குள் வந்து இறைவனை தரிசிக்க முதன் முதலில் ஏற்பாடு செய்த உண்மையான பெரியார் மதுரை வைத்தியநாத அய்யர்தான்.மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த அந்தப் புரட்சியை வரலாறு மறக்கவோ மறுக்கவோ முடியாது.


திரு.கிருஷ்ணமூர்த்தி சிவநாராயணன்


Share it if you like it