வன்முறை வேர் பரப்பும் PFI – வெட்டி எறிய வேண்டியதன் அவசியம்..!

வன்முறை வேர் பரப்பும் PFI – வெட்டி எறிய வேண்டியதன் அவசியம்..!

Share it if you like it

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  (PFI)..!

1993 ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தில், பாபரி கட்டிடம் இடிக்கப் பட்டதையொட்டி,  இஸ்லாமியர்களை  ஒருங்கிணைக்க, கேரளாவில், “தேசிய  முன்னேற்ற  முன்னணி” (National  Development  Front – NDF)  என்ற பெயரில் ஒரு அரசியல் இயக்கம் ஆரம்பிக்கப் பட்டது.

காலப் போக்கில், இஸ்லாமிய சமுதாயத்திற்கு, நல்ல செயல்களை செய்து தருவதாகக்  கூறி,  தங்களுடைய  கிளையை  கேரளா  முழுக்க  பரப்பினார்கள்.  இதன்  மூலம், அவர்களைப்  பற்றிய  நல்லெண்ணம் உயர்ந்தது.  ஆனால்,  சில  காலங்களிலேயே, அவர்களின் உண்மை சொரூபம் வெளியே வந்தது.

2003 ஆம்  ஆண்டு, கோழிக் கோட்டில் உள்ள, “மாராட்” கடற்கரையில்  (Marad Beach), தேசிய  முன்னேற்ற  முன்னணி ( NDF)  பிரிவைச் சேர்ந்த  சிலர்,  கலவரம்  செய்த  வழக்கிலும்,  கொலை  வழக்கிலும்  ஈடுபட்டதாக  கைது  செய்யப்  பட்டனர். எனினும்,  இந்த  வழக்கு, நீதி மன்றத்தில், நிரூபிக்கப் படாததால், யாரும் தண்டிக்கப் படவில்லை.

அவர்களுக்கு,  இஸ்லாமியர்கள்  மத்தியில், கேரளாவில்  கிடைத்த  வளர்ச்சியை  பார்த்து,  பிற  மாநிலங்களுக்கும்,  NDF அமைப்பை விரிவாக்கம்  செய்ய  நினைத்தனர்.  அதனால்,  கேரளா, தமிழ்நாடு,  கர்நாடகா என அருகே  உள்ள  மாநிலங்களில்,  ஒத்த  கருத்து உடைய, இஸ்லாமிய இயக்கங்களை,  ஒன்றிணைக்கும்  முயற்சியில்  ஈடுபட்டு,  அதில்  வெற்றியும் கண்டனர்.

PFI உருவான விதம் :

2006 ஆம்  ஆண்டு, கேரளாவில்  செயல்  பட்ட “தேசிய  முன்னேற்ற  முன்னணி” (NDF),  கர்நாடகாவில்  செயல் பட்ட  “போரம்  பார்  டிக்நிட்டி”  ( Forum  for  Dignity),  தமிழகத்தில்  செயல்  பட்ட “மனித  நீதிப்  பாசறை”  என்ற  மூன்று அமைப்பையும்  இணைத்து,  “பாப்புலர்  ஃப்ரண்ட்  ஆஃப்  இந்தியா”  (PFI)  என்ற புதிய  ஒரு  இயக்கத்தை  உருவாக்கி  செயல்  பட்டார்கள்.

அடுத்த சில வருடங்களில்,  மற்ற  மாநிலங்களில்  உள்ள  இஸ்லாமிய அமைப்புகளையும்  ஒன்றிணைத்தனர்.

கோவாவில்  உள்ள  “கோவா  சிட்டிசன்  ஃபோரம்” (Goa’s Citizen’s Forum), ராஜஸ்தானில்  உள்ள  “கம்யூனிட்டி  சோசியல்  மற்றும்  கல்வி  அமைப்பு” (Community  Social and Educational  Society),

மேற்கு  வங்காளத்தில்  உள்ள  “நாகரிக்  அதிகார்  சுரக்ஷா  சமிதி”  ( Nagarik Adhikar  Suraksha  Samiti),

மணிப்பூரில்  உள்ள  “லைலாங்  சோசியல்  ஃபோரம்” ( Lilong  Social  Forum),

ஆந்திராவில்  உள்ள  “அசோசியேஷன்  ஆஃப்  சோசியல்  ஜஸ்டிஸ்”  (Association of  Social  Justice) ஆகிய மற்ற மாநிலங்களில் இருந்த அமைப்புகளையும் இணைத்து,  அனைத்தும், ஒரு  சேர,  ஒரே  குடையின்  கீழ்,  பி.எஃப்.ஐ.  (Popular Front  of  India – PFI) என்ற  பெயரில் செயல்பட  தொடங்கியது.

தடை செய்யப்  பட்ட  தீவிரவாத  அமைப்பான,  “சிமி”  (SIMI – Students  Islamic Movement  of  India)  இயக்கத்தினருக்கும்,  PFI  இயக்கத்திற்கும், தொடர்பு இருப்பதாக,  பல  நாட்களாகவே,  ஒரு  குற்றச்சாட்டு,  இருந்து  வருகின்றது. தற்போது  பொறுப்பில்  உள்ள  பல்வேறு  PFI  பொறுப்பாளர்களும், “சிமி” இயக்கத்தில்  பொறுப்பில்  இருந்ததாக,  குற்றச்சாட்டு இருந்து  வருகின்றது.

 PFI  மீது கேரளாவில் குற்றம் சாட்டப்பட்ட  வன்முறைகள்:

2010 ஆம்  ஆண்டு கேரளாவில்  உள்ள  நியூ  மேன்  கல்லூரியைச்  சேர்ந்த பேராசிரியர்,  TJ  ஜோசப்  அவர்களின்  வலது கையை, PFI சேர்ந்தவர்கள், இஸ்லாமிய அமைப்பை அவதூறு செய்ததாகக் கூறி,  வெட்டினார்கள்.

இது தொடர்பாக,  37  PFI யினர்  மீது,  வழக்கு  தொடுக்கப்  பட்டு, அவர்கள் கைது செய்யப் பட்டனர்.

2012 ஆம் ஆண்டு, கேரளா  உயர்  நீதி  மன்றத்தில், கேரளா அரசு, தாக்கல்  செய்த  அறிக்கையின்  படி, PFI சேர்ந்தவர்கள்,  27 கம்யூனிஸ்ட்  – ஆர்.எஸ். எஸ். அமைப்பினரை  கொலை  செய்த  வழக்கில்  ஈடுபட்டதாக, அறிக்கை சமர்ப்பித்தது.

2014  ஆம்  ஆண்டோ, 86  கொலை  வழக்கில்  ஈடுபட்டதாக  PFI, மீது கேரளா அரசு  குற்றம் சாட்டி, அறிக்கை சமர்ப்பித்தது.

PFI க்கும் IS க்கும் உள்ள தொடர்பு:

கேரளா போலீஸ் சமர்ப்பித்த அறிக்கையின் படி, குறைந்தது PFI சேர்ந்த பத்து பேர்,  சிரியாவில் உள்ள,  ஐ.எஸ்.ஸிற்கு (IS) சென்று  வந்ததாக  தகவல் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

கர்நாடகாவில்  PFIயின் கை வரிசை:

கர்நாடகாவை சேர்ந்த  PFI  நபர்கள், 4  ஆர். எஸ்.எஸ். ஊழியர்களை கொலை செய்ததாக  குற்றம்  சாட்டப்பட்டது.

ஆர். எஸ். எஸ். அமைப்பைச் சேர்ந்த  ருத்ரேஷ், 2016 ஆம் ஆண்டு, படுகொலை செய்யப் பட்டார்.  இந்த படுகொலை  தொடர்பாக, பெங்களூரு  மாவட்ட PFI தலைவர், அசிம் ஷெரீப் உட்பட ஐந்து PFI அமைப்பினர், கைது செய்யப் பட்டனர்.

இந்து பெண்களை மயக்கி, இஸ்லாமிய மதத்துக்கு மாற்றி, திருமணம் செய்யும்  முறையான, “லவ்  ஜிகாத்”  போன்ற செயல்களில்  ஈடுபட்டதாகவும், PFI சேர்ந்தவர்கள் மீது, பல  குற்றச்சாட்டுகள்  நிலுவையில் உள்ளது.

அக்டோபர்  2017 ஆம் ஆண்டின், முதல் வாரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம்,  PFI அமைப்பை  தடை  செய்ய,  பல்வேறு  தொடர்  கூட்டங்கள் நடத்தியது.

2019 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், ஜார்கண்ட்  மாநில அரசாங்கம், PFI அமைப்பை தடை செய்தது.

2020 ஆம்  ஆண்டு, ஜனவரி  மாதத்தில், உத்தரப் பிரதேசத்தில், மத்திய அரசு இயற்றிய  சட்டமான CAA – NRC -NPR க்கு எதிரான  போராட்டத்தில்,  PFI,  ஈடுபட்டு  இருந்ததாக,  தற்போதைய மத்திய சட்டத் துறை  அமைச்சர்  ரவிசங்கர்  பிரசாத்  அவர்கள், கருத்துக்களை தெரிவித்து  இருந்தார். மேலும், மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில், PFI பங்கு கொண்டு, மாநிலத்தில் பதட்டத்தை உருவாக்குவதாக, உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா அவர்கள் கருத்து தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக,  PFI இயக்கத்தை தடை செய்யுமாறு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, உத்தரப்  பிரதேச காவல் துறை  கடிதம்  எழுதி  உள்ளது.

PFI உடன் தொடர்பு கொண்டவை:

PFI அமைப்பைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு-  தேசிய பெண்கள் முன்னணி, National Women’s Front,

PFI அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்பு – CFI, Campus Front of India,

PFI அமைப்பைச் சேர்ந்த அரசியல் அமைப்பு – SDPI, Social Democratic party of India

மூன்று வருடத்திற்கு  ஒரு முறை, தேர்தல் வைத்து, தங்களுடைய நிர்வாகிகளை, PFI  அமைப்பினர்  தேர்ந்து  எடுப்பார்கள்.  முதலில், கோழிக்கோட்டில்  இருந்த  தலைமை  அலுவலகம், பிறகு,  தில்லிக்கு  மாற்றப் பட்டது.

22 மாநிலத்தில்,  PFI  அமைப்பு  இருப்பதாக  தெரிகிறது . இவர்களுக்கான  நிதி, மத்திய  கிழக்கு  நாடுகளில்  இருந்து  வருவதாக,  செய்திகள்  உலா வருகின்றன.

இந்த நாட்டில்  வாழும் எவரும், எந்த அமைப்பையோ அல்லது கட்சியையோ தொடங்கலாம், தொடர்ந்து நடத்தி வரலாம். ஆனால், தனக்கு கிடைத்த பேச்சு உரிமைகளை, தவறான வழிகளில் பயன் படுத்தி, சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி, போராட்டத்தை  தூண்டும் வகையில்  செயல் பட்டால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

மத்திய அரசு, எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதற்கு எதிராக, போராட்டம் செய்வதையே, முழு நேரத் தொழிலாக, சிலர் செய்து வருகின்றார்கள்.

அமைதிப்  பூங்காவாக  விளங்கி  வரும்,  நமது இந்திய நாட்டில் எந்த வித தீவிரவாத  கும்பலுக்கும், இடம் கொடுத்து விடக் கூடாது என்பதே, அனைத்து தேசிய  நலன் கொண்டவர்களின், எண்ணமாக இருந்து வருகின்றது.

தடை செய்யப் பட்ட  இயக்கத்தின், மறு உருவமாக திகழும் அமைப்பை, ஏன் தடை செய்யக் கூடாது என பொது மக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே வேளையில், அவர்கள் நல்ல செயல்கள் செய்வதாக கூறினாலும், சமுதாயத்தில் யாரேனும் ஒருவருக்கு, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதனுடைய தாக்கம் மிகப் பெரிய அளவில் ஏற்படும்.

எனவே, நல்ல செயல்கள்  செய்யும் அமைப்பை வளர்க்க வேண்டும் எனவும், தீய செயல்கள் செய்யும் அமைப்பை  தடை  செய்ய வேண்டும் எனவும், தேச நலன் சார்ந்து  சிந்திக்கும், பொது  மக்களின்  கருத்தாக  இருந்து  வருகின்றது. இது தொடர்பாக, வரக் கூடிய காலத்தில், மத்திய, மாநில அரசுகள், என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது, என்பதை நாம் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

  • அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

https://www.thequint.com/explainers/explainer-why-government-wants-pfi-banned-popular-front-of-india#read-more

https://www.hindustantimes.com/india-news/the-story-of-popular-front-of-india-and-reason-behind-its-growth/story-kOYX8k91LjsaY8EC9sbZDO.html

 


Share it if you like it