PHOTO SHOP செய்த கல்வி அமைச்சர் பாடம் புகட்டிய பிள்ளையார்.
கல்வியமைச்சர் அன்பில் பொய்யா மொழி மகேஷ் அவர்கள், தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் ஆசி பெற அவரின் இல்லத்திற்கு சென்று உள்ளார். அப்பொழுது எடுத்த புகைபடத்தில் விநாயகர் உருவம் தெரிந்தது அதனை PHOTO SHOP செய்து மறைத்து விட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.
கல்வி அமைச்சரின் பின்னால் இருந்த கண்ணாடியில் விநாயகர் Reflection-னை மறைக்க தவறிய சம்பவம் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தி.மு.க-வில் 90% ஹிந்துக்கள் இருப்பதாக கூறும் தி.மு.க, தொடர்ந்து ஹிந்துக்களையும், ஹிந்து உணர்வுகளையும், தொடர்ந்து புண்படுத்தி வருகிறது என்பதற்கு இதுவே சிறந்த சான்று. விநாயகரின் மீது வன்மத்தை காட்ட முயன்ற கல்வியமைச்சருக்கும், ஹிந்துக்கள் மீது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் முதல்வருக்கும், சேர்த்து விநாயகர் தற்பொழுது புத்தி புகட்டி உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.