ஊழல் தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு: பிரதமர் மோடி விளாசல்!

ஊழல் தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு: பிரதமர் மோடி விளாசல்!

Share it if you like it

தமிழகத்தில் ஊழல் வழக்குகள் இருந்தபோதும், தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன என்று பிரதமர் மோடி விளாசி இருக்கிறார்.

அந்தமான், நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் போர்ட் பிளேயரில் வீரசாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த புதிய முனையம் ஒரே நேரத்தில் 10 விமானங்களை நிறுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நாங்கள் கடல் வழியாக பைபர் ஆப்டிகல் கேபிள் மூலம் இணையதள சேவைகளை அந்தமானுக்கு கொண்டு வந்துள்ளோம். போர்ட் பிளேயரில் மருத்துவக் கல்லூரி கட்டியுள்ளோம்.

பெங்களூரில் ஊழல்வாதிகள் அனைவரும் சேர்ந்து ஒரு கூட்டத்தை போட்டுள்ளனர். அவர்களுக்கு அவர்களது சொந்த குடும்பத்தினரின் நலன்தான் முக்கியம். நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்கள் மூலம் நடத்தப்படுவது. ஆனால், அரசு என்பது குடும்பத்திற்காக குடும்பம் மூலம் நடத்தப்படுவது என்பதே இவர்களின் முழக்கம். ஊழல்வாதிகளை பாதுகாக்க தற்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகின்றன. அவர்களுக்கு குடும்பம்தான் முதன்மையானது, தேசம் ஒன்றும் இல்லை. ஊழல்தான் அவர்களின் உந்துதலாக உள்ளது.

பெரிய ஊழல், அதிக ஊழல் நபருக்கு மீட்டிங்கில் முக்கியத்துவம் தருவார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தமிழகத்தில் ஊழல் வழக்குகள் இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுக்கு நற்சான்றிதழை கொடுத்துள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் நாங்கள் பழைய அரசின் தவறுகளை சரி செய்ததோடு, மக்களுக்கு புதிய திட்டங்களையும் கொண்டு வந்துள்ளோம். இன்று இந்தியாவில் ஒரு புதிய மாடல் வளர்ச்சி இருக்கிறது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இது இருக்கிறது” என்றார்.


Share it if you like it