பிரதமரின் கல்வித் தகுதி: அசிங்கப்பட்ட கெஜ்ரிவால்!

பிரதமரின் கல்வித் தகுதி: அசிங்கப்பட்ட கெஜ்ரிவால்!

Share it if you like it

பிரதமர் மோடியின் கல்வித் தகுதி பற்றி தகவல்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்து குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

பாரத பிரதமர் மோடி, 1978-ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டமும், 1983-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் Entire Political Science பாடப்பிரிவில் முதுகலை பட்டமும் பெற்றதாக தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மேற்குறிப்பிட்ட காலங்களில் அப்படியொரு படிப்பே இல்லை என்றும், பிரதமர் மோடியைத் தவிர உலகத்தில் வேறு யாருமே அப்படிப்பை படிக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியின் பட்டங்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தலைமை தகவல் ஆணையருக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து, மோடியின் பட்டங்களை வழங்குமாறு குஜராத் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டர். இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் கோர்ட்டை அணுகியது. ஆகவே, குஜராத் உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை நிறுத்தி வைத்தது. இந்த வழக்கில்தான் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது, குஜராத் பல்கலைக்கழகத்திற்கு தலைமை தகவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் ரத்து செய்ததோடு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும், இத்தொகையை குஜராத் மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் 4 வாரங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it