கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் துளசி கவுடா-விற்கு நாட்டின் மிக உயரிய விருதினை மத்திய அரசு வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் அங்கோலா வட்டத்தின் ஹொன்னாலி கிராமத்தைச் சேர்ந்த துளசி கவுடா சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். கிட்டதட்ட 100,000 மரக்கன்றுகளை நட்டு சத்தமில்லாமல் சமூகத்திற்கு மிகப் பெரிய சேவையினை செய்து உள்ளார். முறையான கல்வி பெறாத நிலையிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை செலவு செய்து உள்ளார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இவரது பணியை போற்றும் விதமாக பல்வேறு சமூக அமைப்புகள் இவரை கௌரவித்துள்ளன. இந்நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசு துளசி கவுடா-விற்கு பத்மஸ்ரீ விருதினை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. தேசத்திற்கும், சமூகத்திற்கும், சேவை செய்கிறேன் என்னும் போர்வையில், தமிழகத்தை சேர்ந்த சில போலி சமூக ஆர்வலர்கள் துளசி கவுடாவை பார்த்து தங்களை திருத்தி கொண்டு இனிமேலாவது தேசத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.