பிரதமர் நாளை பெங்களூரு வருகை – இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் பாராட்டுகிறார்

பிரதமர் நாளை பெங்களூரு வருகை – இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் பாராட்டுகிறார்

Share it if you like it

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் இயக்கத்தை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகள் கண்காணித்து இயக்கி வருகின்றனர். விண்ணில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் தகவல் தொடர்பை நிறுவியது. மேலும் விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்த பிரக்ஞான் ரோவரும் நிலவில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (சனிக்கிழமை) பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வருகை தந்து விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டுகிறார்.


Share it if you like it