மஹா விஷ்ணுவின் ஸயன கோலத்தில் மஹா லக்ஷ்மி தாயார் மஹா விஷ்ணுவின் கால் பிடித்து சேவகம் செய்யும் சூட்சுமம்

மஹா விஷ்ணுவின் ஸயன கோலத்தில் மஹா லக்ஷ்மி தாயார் மஹா விஷ்ணுவின் கால் பிடித்து சேவகம் செய்யும் சூட்சுமம்

Share it if you like it

பெரும்பாலும் சயன கோலத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்து இருக்கும் மகாலக்ஷ்மி தாயார் மகாவிஷ்ணுவின் பாதங்களைப் பிடித்து விட்டு சேவகம் செய்வது போன்ற திருக்கோலத்தை நாம் காண்பதுண்டு . அதன் தார்ப்பர்யம் இதுவே . நம் உடலில் உள்ளங்கை என்பது சுக்கிரனின் வாழ்விடம் : முழங்கால் சனியின் வாழ்விடம். ஜோதிட ரீதியாக சனி – சுக்கிரன் சேர்க்கை என்பது பெரும் செல்வம் – செல்வாக்கிற்கு நம்மை அதிபதி ஆக்கும்- குபேர யோகம் -மஹாலக்ஷ்மி யோகம் மற்றும் ராஜயோகம் தரவல்லது. அதோடு சுக்கிரன் களத்திர காரகன் -காதல் நாயகன் ஆவார். சனி பகவான் வழிவிட்டால் அன்றி எந்த கிரகத்தின் அனுக்கிரகமும் நமக்கு கிட்டாத சனி ப்ரீத்தி சர்வ ப்ரீத்தி ஆகும் .

மனைவி தன் உள்ளங்கைகளை குவித்து தன் கணவனின் முழங்கால்களை பிடித்து சேவகம் செய்யும் போது அது சனி ப்ரீதியாகிறது .

மற்றொரு வகையில் தம்பதியரின் புரிதல் மற்றும் அன்யோன்யத்திற்கு அனு கிரகிக்கும் . சனி – சுக்கிரன் சேர்க்கை காரணமாக பெரும் செல்வம் செல்வாக்கு பெண்ணிற்கு வாய்க்கும். அவளை மனைவியாக அடையப் பெற்ற ஆண் மகனுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் . எடுத்த காரியங்களில் வெற்றி காரிய சித்தி புகழ் செல்வாக்கு ஓங்கும்

தன் மணவாளன் கால் பற்றி சேவகம் செய்யும் மகாலக்ஷ்மி கோவும் போற்றும் சகல சௌபாக்கியம் – செல்வம் – செல்வாக்கு – தனம் – தானியம் என்று அனைத்திற்கும் அதிபதி ஆகிறாள். தன் மனையாளின் புன் முறுவலோடு கூடிய சேவகம் பிராப்தம் பெற்ற மகாவிஷ்ணு தீமைகளை அழித்து நன்மைகளை இரட்சித்து மூவுலகையும் காத்தருளும் காவல் தொழிலானாகி மூவரும் தேவரும் போற்றும் புகழும் செல்வாக்கும் பெற்றவராகிறார் .இதற்கு மாறாக கணவன் மனைவியின் கால்களை பிடிக்கும் சூழல் நேருமே ஆனால் அந்த மனையை விட்டு மகாலட்சுமி அகன்று விடுவாள் மூதேவி வாசம் செய்வாள்.

நாம் பெரும்பாலும் திருமணங்களை ஆலயங்களில் நடத்தும் போது மகாவிஷ்ணுவின் ஆலயங்களில் திருமணங்களை நடத்த தீர்மானிக்கும் சூட்சமம் இதுவே. தம்பதியர் புரிதல் – காதல் – அன்யோன்யம் என்று மன மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வைணவ திருத்தலங்களில் திருமணம் நடத்துவதும் தெய்வ திருமணங்களை நேர்த்திக்கடனாக நடத்தி வைப்பதும் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது

உங்களில் யாரெல்லாம் செல்வம் செல்வாக்கு புகழ் அந்தஸ்து என்று வலம் வருகிறீர்களோ? உங்கள் அனைவரின் ஜனன ஜாதகத்திலும் நிச்சயம் சனி – சுக்கிரன் சேர்க்கை இருக்கும் . திருமணமானவர்கள் எனில் நிச்சயம் உங்களின் வாழ்க்கைத்துணையின் ஜாதகத்திலும் சனி- சுக்கிரன் சேர்க்கை இருக்கும். நீங்கள் தாராளமாக சோதித்துப் பார்க்கலாம்.

பெண்கள் ஒழுக்கம் கல்வி வீரம் என்று வாழ்ந்தாலும் நாராயணனின் மார்பில் உறையும் மகாலட்சுமி போல தன் கணவனின் அன்பில் அரவணைப்பில் வாழ வேண்டும் என்று சூட்சமமும் கணவன் எவ்வளவுதான் செல்வம் செல்வாக்கு அதிகாரம் புகழ் கொண்டவனாக இருந்தாலும் தன் மனையாளை மதித்து மரியாதை செய்து அவளை மார்பில் வைத்து அரவணைக்க வேண்டும் என்ற சூட்சமமும் .இரண்டும் உள்ளடங்கிய உயர்ந்த தத்துவமே மலர்மகளின் சேவையில் மையல் கொள்ளும் மஹாவிஷ்ணுவின் சயன கோலம் நமக்கு அறிவிக்கும் உயர்ந்த வாழ்க்கைத் தத்துவம். இந்தப் புண்ணிய பூமியில் பிறந்த பெண்கள் திக்விஜயம் வென்ற சக்ரவர்த்தினியாக இருந்தபோதிலும் தன் கணவனுக்கு சேவகம் செய்வதும் அவனுக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்வதுமே உண்மையான மன மகிழ்ச்சியாக உணர்ந்தார்கள்

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக நாராயணன் மனிதனாக இறங்கி வந்த போதிலும் கூட தன் சக பாகினியாளை காக்க கடல் கடந்து போகவும் பிரம்மஹத்தி தோஷம் வரினும் அவளின் கற்புக்கு களங்கம் விளைவிக்க முயன்றவனை கொன்று குவிக்கவும் தயங்காது காதலில் நாயகனாக மனையாளின் காவலனாக வாழும் வாழ்வே ஆண் மகனுக்கு உண்மையான மன மகிழ்ச்சி என்று வாழ்ந்தார்கள்

இந்த பூமியின் பாரம்பரியம் என்ன என்பதை உணர்ந்த மகத்தான ஆண்களும் பெண்களும் இதை உணர்ந்ததாலேயே இன்றளவும் நம் தேசத்தின் பாரம்பரிய வாழ்வியல் உயிர்ப்போடு இருக்கிறது . தன் மணவாளனுக்கு. வெற்றியும் கீர்த்தியும் சேர்ப்பது மனையாளின். பெண்மைக்கு பேரழகு . அந்த மங்கையளின் நலமும் வளமும் காக்கும் அரணாக வாழ்வதே ஆண்மகனின் பேராண்மைக்கு பேரழகு. இந்த மகிழ்ச்சியை இறைவனிடம் பிராப்தம் பெறாமல் அல்லது வாய்க்க பெற்றும் விதிவசத்தால் தவறவிட்ட துரதிர்ஷ்டசாலிகள் இருக்கலாம். ஆனால் இந்த உன்னதத்தை உணராதவர்கள் யாரும் இருக்க முடியாது

ஓம் நமோ நாராயணா நமஹ

ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவி நமஹ

அலங்கார நாகம் மேல்

அலர்மேலு வல்லியின்

அன்போடு ஸயனிக்கும் ஸ்ரீ ரங்கனே

ஸயனம் ஆனந்தம்

நயனம் ஆனந்தம்

திருவே ஆனந்தம்

திருவடி ஆனந்தம்

ஓம் நமோ நாராயணா

ஸ்ரீ லக்ஷ்மி நமோ நாராயணா


Share it if you like it