விடியல் ஆட்சியில் மக்களுக்கு வெளிச்சம் வருகிறதோ இல்லையோ மின்வெட்டு மட்டும் தொடர்கதையாக இன்று வரை இருந்து வருகிறது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. சிறு மழை தூறலுக்கே மின்வெட்டை அமல்படுத்தும் நிலைக்கு தி.மு.க அரசு வந்து விட்ட நிலையில். பிரபல அரசியல் விமர்சகர் கிருஷ்ண குமார் முருகன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழகத்தின் மின்நிலையம் குறித்து இவ்வாறு பதிவு செய்து உள்ளார்.
தமிழகத்தில் இயங்கும் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பின் விவரம்..
தேவையான கையிருப்பு : 22.5 லட்ச டன்
தற்போதிருக்கும் கையிருப்பு வெறும் 2.87 லட்ச டன் 10% கையிருப்புடன் எப்பொழுது வேண்டுமானாலும் மின்சார உற்பத்தி தடைப்படலாம் என்ற நிலையில் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது. வல்லூர் அனல் மின் நிலையத்தில் வெறும் 2 சதவீத கையிருப்பே உள்ளது. Regulations காரணமாக நிலக்கரி வழங்குதல் தடைப்பட்டுள்ளது. நாளைக்குத் தேவையான நிலக்கரி இல்லாமல் 1500MW வல்லூர் அனல் மின் நிலையம் எப்படிச் செயல்படும்?