கொள்முதல் செய்வதாகக் கூறி, வெட்டிச் சொல்லி விட்டு வாங்காததால், ஆத்திரத்தில் இருக்கும் கரும்பு விவசாயிகள், நீங்க நல்லா இருங்க, நாங்க நாசமாப் போறோம் என்று ஸ்டாலினுக்கு சாபம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு வாரி வழங்குவதும், விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது என்பது விவசாயிகள் புலம்பி வருகிறார்கள். இந்த சூழலில், மீண்டும் விவசாயிகள் வயிற்றில் அடித்திருக்கிறது ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு. அதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் 1,000 ரூபாய் ரொக்கமும் வழங்குவதாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இதையடுத்து, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றை கொள்முதல் செய்யும் பணியில் தமிழக அரசு இறங்கியது. அதன்படி, பஞ்சாப் மாநிலத்திலிருந்து பச்சரிசியை ரூ.35-க்கு கொள்முதல் செய்தது. அதேசமயம், தமிழகத்திலிருந்துதான் சர்க்கரை, கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கரும்பு பயிரிட்டிருந்த விவசாயிகளை சந்தித்து, கரும்புகளை கொள்முதல் செய்துகொள்வதாகவும், அறுவடை செய்து தயாராக வைத்திருக்கும்படியும் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
இதை நம்பி கரும்பு விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களை வரவழைத்து கரும்பை அறுவடை செய்து தயாராக வைத்திருக்கிறார்கள். ஆனால், அதிகாரிகளைத்தான் காணவில்லை. இதுகுறித்து கரும்பு விவசாயிகள் விசாரித்தபோதுதான் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஸ்டாலின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஆந்திர விவசாயிகளுக்கு தனது விசுவாசத்தை காட்டி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது, பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகள் மூலம் தமிழக மக்களுக்கு சப்ளை செய்வதற்கு ஆந்திரா மாநில கரும்பு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கு அதிகாரிகள் கூறிய சொத்தைக் காரணம்தான் சுவாரஸ்யமானது. அதாவது, தமிழக அரசு 6 அடி உயரமுள்ள கரும்பை மட்டுமே கொள்முதல் செய்யச் சொல்லி இருப்பதாக சப்பைக் காரணத்தை சொல்லி இருக்கிறார்கள். இதனால், கரும்பு விவசாயிகள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் ஒரே மாதிரியாகவா இருக்கின்றன. ஒருவர் குட்டையாகவும், நெட்டையாகவும் இருப்பது சகஜம்தானே என்று கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள். அதோடு, நீங்க நல்லா இருக்க, நாங்க நாசமாப் போறோம் என்று ஸ்டாலின் அரசுக்கு சாபம் விட்டு வருகிறார்கள்.