தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக சித்திரை 1ம் தேதி புத்தாண்டு கொண்டாடிவரும் பழக்கத்தை மாற்றி அப்போதைய முதல்வர் கருணாநிதி, தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டு என சட்டம் இயற்றினார். இதற்க்கு பல தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து வந்த சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அச்சட்டத்தை நீக்கி சித்திரை ஒன்றாம் தேதியையே புத்தாண்டாக அறிவித்தது.
இந்நிலையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக அரசு பதவி ஏற்றபிறகு தமிழகம் சந்திக்கும் முதல் பொங்கல் இது. இதனை அடுத்து பொங்கல் திருநாள் அன்று தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்குவது வழக்கம். இம்முறை அரசு சார்பாக வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு பைகளில் தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் என அச்சிடப்பட்டதாக வெளியான புகை படம் சர்ச்சை கிளப்பி உள்ளது.