பாரதத்தின் பொக்கிஷமான இரட்டையர்கள் – இருவரின் இலக்கும் தேசத்தின் வெற்றியே

பாரதத்தின் பொக்கிஷமான இரட்டையர்கள் – இருவரின் இலக்கும் தேசத்தின் வெற்றியே

Share it if you like it

பிரக்ஞானந்தா என்ற 20 வயது கூட எட்டிப் பிடிக்காத அந்த இளம் குமரன் சாதாரண குடும்பத்தில் பிறந்து எந்த விதமான சிறப்பு பயிற்சி வாய்ப்புகளுக்கும் வசதி இல்லாத ஒரு நடுத்தர குடும்பத்தின் மகன். போலியோவால் பாதிக்கப்பட்ட தந்தை இரண்டு குழந்தைகளையும் பெறும் சிரமத்திற்கு இடையிலும் நல்வழியில் வளர்த்தெடுக்கும் தாய் என்று இறைவன் கொடுத்த வரத்தை சரியாக பயன்படுத்தி தன்னுடைய தனி திறமையை கண்டறிந்து அதில் மேலும் மேலும் தகுதி திறமைகளை வளர்த்து தன்னை ஒரு சதுரங்க வீரனாக உள்ளூரில் நிலை நிறுத்தியவன். அதே சதுரங்க விளையாட்டில் பெரும் முயற்சி உத்வேகத்தோடு தேசிய அளவில் தனக்கான இடத்தை வென்றெடுத்தவன். ஆசியி அளவில் நடந்த போட்டிகளில் வெற்றிவாகை சூடி வந்தவன் .இன்று சர்வதேச அளவில் வெற்றி பெற்ற வெற்றியாளனையும் வென்றெடுத்து மாவீரனாக உயர்ந்து நிற்கிறான்.

நடந்து முடிந்த சர்வதேச போட்டியில் அவன் இரண்டாம் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் 30 வயது கடந்த இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஒரு மாவீரனுக்கு தோல்வி பயத்தை பக்கத்தில் நிறுத்தி தோர்ப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற உணர்வை எப்போது ஒரு 17 வயது சிறுவன் ஏற்படுத்தினானோ? அப்போதே அவன் வென்று விட்டான். அந்த வகையில் மூன்றாவது முறையாக அந்த மாவீரன் தனது சாம்பியன்ஷிப் பட்டத்தை வெற்றி பெற்று இருந்தாலும் நூலிழையில் அவன் பெற்ற வெற்றியும் அதே நூலிழையில் இந்த சிறுவன் தவறவிட்ட வெற்றியையும் ஒன்றே. உண்மையில் இரண்டாம் இடம் பிடித்த இந்த சிறுவனை தான் உலகம் முழுவதிலும் பெரும் வெற்றியாளனாக கொண்டு சேர்த்து இருக்கிறது.

ஒரு சாதாரண குடும்பத்தில் வந்த தென்னிந்திய சிறுவன். நெற்றியில் விபூதி தரித்த பாரம்பரிய அடையாளம். எந்த பகட்டும் ஆடம்பரமும் இன்றி பதட்டம் இன்றி அனாவசியமாக காய் நகர்த்தும் அவனது ஆடும் திறன் கண்டு இரண்டு முறை வெற்றி பெற்ற உலகச் சாம்பியனாக வலம் வரும் அந்த வீரனும் ஒரு கணம் நிச்சயம் ஆடித்தான் போயிருக்கிறான். அதனால் தான் தன்னுடைய வெற்றியை போராடி தக்க வைத்த போதிலும் இறுதிவரை போராடி தோற்று இரண்டாம் இடம் பிடித்த வீரனை அவன் தன்னிலும் மேலாக மதித்து வாழ்த்தி மகிழ முடிந்தது.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப உலகமே கொண்டாடும் தன் மகனை அவனது போராட்ட விளையாட்டை வெற்றியின் விளிம்பில் நின்று வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் பரிதவிக்கும் அவனது போராட்டத்தை வெளியில் நின்று மனதளவில் உணர்ந்த அந்த தாயின் பரிதவிப்பு பிரசவ வலியிலும் கூடுதல் வேதனை என்பதை உலகில் உள்ள ஒவ்வொரு தாயாலும் உணர முடிந்தது. ஆனாலும் வெற்றிகரமான தோல்வி என்று தோல்வியை கூட உலகமே கொண்டாடும் வெற்றியாக மாற்றி கொடுத்த அந்த மாவீரன் இன்று தோல்வியிலும் துவளாது அடுத்த கட்ட முயற்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறான்.

பெரும் முயற்சிக்கு இடையில் போராடி தோல்வியுற்ற போதிலும் இந்த இளம் பிராயத்தில் சதுரங்க விளையாட்டில் தனக்கென்று ஒரு பெரும் இடத்தையும் உலகின் அங்கீகாரத்தையும் வென்றெடுத்த அந்த சிறுவனை குடும்பத்தோடு அழைத்து நேரில் பாராட்டி இருக்கிறார் உலகமே ஒற்றைத் தலைவராக ஏற்று வழி நடக்கும் பாரதத்தின் பிரதமர் மோடி. தன்னைப்போல் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இந்த தேசத்திற்கு உலக அரங்கில் பெரும் பெருமையை தேடித் தந்த அந்த சிறுவனை குடும்பத்தோடு அழைத்து கௌரவிப்பது தான் உரிய கௌரவமாக இருக்கும் என்பதை உணர்ந்து அவர் அதை சரியாக செய்து விட்டார். விளையாட்டு சிறுவன் தானே என்று அலட்சியம் காட்டாமல் அந்த விளையாட்டிலும் உலகில் தேசத்திற்கு பெருமிதம் தேடித் தந்த மாவீரன் என்ற வகையில் அவனை கௌரவித்திருக்கிறார்.

தன் மகனை அவயத்தில் முந்தி இருக்கும் படியாக வளர்த்தெடுப்பது ஒரு தந்தையின் கடமை. அப்படி வளர்த்தெடுத்த தந்தைக்கு பெரும் பெருமையை தேடித் தருவது மகனின் கடமை. அந்த வகையில் ஒரு தேசத்தின் தலைவனாக தந்தை ஸ்தானத்தில் இருந்து சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீரன் கூட சர்வதேச அளவில் கோலோச்சுவதற்கு தேவையான அத்தனை வசதி வாய்ப்புகளையும் நாட்டில் பரவலாக்கி பிரதமராக அவர் தனது தந்தைக்கான கடமையை நிறைவேற்றி விட்டார். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தகுதியாலும் திறமையாலும் கடும் உழைப்பு முயற்சியாலும் மேலும் மேலும் வெற்றிகளை பெற்று இளம் வயதிலேயே உலக சாதனைகளை நிகழ்த்தி ஈன்ற தந்தைக்கும் தேசத்தை வழிநடத்தும் தந்தை ஸ்தானத்தில் இருக்கும் ஒரு தலைவனுக்கும் உலகளவில் பெரும் பெருமையைத் தேடிக் கொடுத்து விட்டான் அந்த தங்க மகன்.

தேசத்தின் பிரதமர் தன்னை அழைத்து கௌரவிக்கும் போதிலும் எப்போதும் போல தன் இயல்பு மாறாமல் சாதாரணமாக குடும்பத்தோடு போய் நின்று எத்தனை உயரம் போனாலும் என் இயல்பும் என் குடும்பத்தின் இயல்பும் எப்போதும் மாறாது என்று பிரதமரின் முன் நின்று உங்களின் எளிமைக்கும் அர்ப்பணிப்பிற்கும் சற்றும் குறைந்ததல்ல என்னுடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் என்று சொல்லாமல் சொல்லி வந்தானே அவனே இந்த தேசத்தின் எதிர்காலம். சதுரங்க ஆட்டத்தின் நிகழ்காலம். எதிர்வரும் தலைமுறைக்கு அவனே வழிகாட்டும் நம்பிக்கை நட்சத்திரம்.

இஸ்ரோவின் சந்திராயன் முயற்சி தோல்வி அடைந்தவுடன் உடைந்து அழுத விஞ்ஞானி சிவனை கட்டி அணைத்து தோளோடு சாய்த்து கவலைப்பட வேண்டாம் உங்களோடு தேசம் இருக்கிறது உங்களின் அடுத்த முயற்சியை தொடருங்கள் என்று அவருக்கு ஆறுதல் சொல்லி தேற்றிய போது ஒரு தந்தை மனவலியையும் ஒரு தேசத்தின் தலைவனுக்கான ஆதங்கமும் நெருக்கடி காலத்தில் தோல்வியில் மக்களை அரவணைக்கும் பண்பையும் வெளிப்படுத்தினார்.

இன்று அதே பிரதமர் விளையாட்டில் தோல்வி என்று இரண்டாம் இடம் பெற்றாலும் வெற்றிக்கும் மேலான பெரும் புகழையும் உலக மக்களின் ஈர்ப்பையும் தேச மக்களின் அன்பையும் ஆசியையும் வென்றெடுத்த அந்த சிறுவனை அழைத்து அவனை அரவணைத்து வாழ்த்தியதன் மூலம் வெற்றியோ தோல்வியோ தேசத்திற்கு அர்ப்பணிப்போடு முயற்சியும் உழைப்பும் தரும் யாரையும் விட்டுவிடுவதற்கில்லை. அவர்களின் உழைப்பு முயற்சியும் வெற்றியை கொடுத்தாலும் தோல்வியை கொடுத்தாலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் கவுரவமும் கொடுக்க தவறுவதில்லை என்ற தேசத் தலைவனுக்கு உண்டான தனது மாண்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார்.

மூத்தவர் ஒரு தேசத்தின் பிரதமராக உள்ளூர் அரசியல் தொடங்கி தேசிய அரசியல் வரை உள்நாட்டில் அரசியல் களத்தில் காய் நகர்த்தி காரியம் சாதிக்கும் வல்லவர். ஒருவர் நாட்டின் பிரதமராக கத்தியின்றி இரத்தமின்றி அரசியல் நகர்வில் பகைநாட்டை சாய்த்து போட்ட சாணக்கியர். அரசியல் சதுரங்கத்தில் எங்கு எப்போது எந்த காயை எதை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற சாமர்த்தியம் கொண்டு ஒரு புறம் எதிரி நாடுகளை வீழ்த்தி மறுபுறம் சர்வதேச சமூகத்தை தன் தேசத்தின் பக்கம் நிறுத்தி வைத்த அரசியல் சதுரங்க வீரர். சர்வதேச அரசியல் களத்திலும் தன் தேசத்திற்கு எது சரியோ எது நன்மை தருமோ அதை நோக்கிய பயணத்தில் காய் நகர்த்தி வெற்றி கொள்ளும் அசகாயர்.

மற்றொருவன் இளம் சிறுவன் என்றாலும் தன் முயற்சி உழைப்பின் மூலம் அடுத்தடுத்து பெரு வெற்றிகள் பெறுவதும் தேசத்தின் பெருமையை சதுரங்க விளையாட்டின் நிலை நிறுத்தி விளையாட்டு வீரன். அந்த வகையில் ஒருவர் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தி எதிரிகளுக்கு தோல்வி பயத்தை கொடுப்பவர். மற்றொருவன் சதுரங்க விளையாட்டின் காய் நகர்த்தி எதிரில் இருப்பவருக்கு தோல்வி பயத்தை அருகில் நிறுத்துபவன். ஆனால் இருவரின் இலக்கும் ஒன்றுதான். அது பாரத தேசத்தின் வெற்றி. பாரத தேசத்தின் பெருமிதம். சர்வதேச அளவில் கௌரவம் மட்டுமே. அந்த வகையில் இருவரும் வெவ்வேறு துறையில் வழியில் பயணித்தாலும் இருவரின் வெற்றியும் தேசத்தின் வெற்றியே.


Share it if you like it