தமிழகத்தை சேர்ந்த பிரனேஷ்  சாதனை… தலைவர்கள் வாழ்த்து!

தமிழகத்தை சேர்ந்த பிரனேஷ் சாதனை… தலைவர்கள் வாழ்த்து!

Share it if you like it

தமிழகத்தை சேர்ந்த பிரனேஷ் செஸ் விளையாட்டு போட்டியில் சாதனை படைத்துள்ளான். இதையடுத்து, அவருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்தவகையில், பிரனேஷ் எனும் சிறுவன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளான். இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இதோ ;

தமிழகத்தை சேர்ந்த, 16 வயதே ஆன இந்திய செஸ் வீரர் பிரனேஷ், 79வது செஸ் கிராண்ட் மாஸ்டராக உயர்ந்துள்ளார். 5 வயதில் இருந்து ஆரம்பித்த அவரது விளையாட்டுப் பயணம், 13 வயதில், சர்வதேச செஸ் மாஸ்டர் என்ற உச்சத்தைத் தொட்டு, தற்போது கிராண்ட் மாஸ்டர் எனும் மைல் கல்லை எட்டியிருக்கிறது. தேசிய, சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றிருக்கும் அவர், மென்மேலும் பல சாதனைகள் படைத்து, தேசத்திற்கு மேலும் பெருமை சேர்க்க, தமிழக பா.ஜ.க. சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it