இந்த வாயின்கோ யூ டியூப் சேனல் தி.மு.க.வை கலாய்த்து வெளியிட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் நடப்பாண்டிற்கான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி துவங்கியது. அந்த கூட்டத்தொடரில், தனது உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததால், அவையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். இதையடுத்து, அவர் மீது தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அவதூறு பிரச்சராத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் கெட் அவுட் ரவி என்று ஹேஷ்டேக் உருவாக்கி கழக கண்மணிகள் டிரெண்ட் செய்து இருந்தனர். அதேபோல, தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கவர்னரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆளுநரை `போய்யா’ என்று பேரவையில் ஒருமையில் கத்திய காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். இதனை தொடர்ந்து, காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், வழக்கறிஞர் வில்சன் எம்.பி., ஆ. ராசா எம்.பி., டி. பாலு எம்.பி., மற்றும் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி உளிட்டவர்கள் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து ஆளுநரை நீக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், இந்தா வாயின்கோ எனும் யூ டியூப் சேனல் தமிழக முதல்வர் ஸ்டாலினையும், தி.மு.க.வின் எம்.பி.க்கள் குழுவையும் கிண்டல் செய்து காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதுதான், தற்போது வைரலாகி வருகிறது.