பிரதமராகும் தகுதி ஸ்டாலினுக்கு இருக்கிறது: ‘வருங்கால ஜனாதிபதி’ முருகேசனாக மாறிய பொ.செ. துரைமுருகன்!

பிரதமராகும் தகுதி ஸ்டாலினுக்கு இருக்கிறது: ‘வருங்கால ஜனாதிபதி’ முருகேசனாக மாறிய பொ.செ. துரைமுருகன்!

Share it if you like it

தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய துரைமுருகன், “இந்தியாவை காப்பாற்றும் தகுதியும் திறனும் உங்களுக்கு இருக்கிறது. இதைத்தான் இந்த நாடும் நினைக்கிறது. ஆகவே, இந்தியாவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. நீங்கள்தான் இந்தியாவிற்கு தலைமை தாங்க வேண்டும்” பேசியிருக்கிறார். இந்த காணொளியை மீம்ஸ் கிரியேட்டர்கள் ‘என் புருஷன் குழந்தை மாதிரி’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் வருங்கால ஜனாதிபதி முருகேசன் என்று காமெடி காட்சியை இணைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அனைவரும், துரைமுருகன் இப்படி வருங்கால ஜனாதிபதி முருகேசன் என்று கூறும் நிலைமைக்கு வந்து விட்டாரே என்று கிண்டலடித்து வருகின்றனர்.


Share it if you like it