மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியா  ? முடிவுக்கு வருகிறதா மம்தா பானர்ஜி ஆட்சி ?

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியா ? முடிவுக்கு வருகிறதா மம்தா பானர்ஜி ஆட்சி ?

Share it if you like it

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கூட்டாளிகள் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பலரது நிலங்களை அபகரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மேற்கு வங்காள மாநிலத்தில் பற்றி எரியத் தொடங்கி உள்ளது.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் அந்த கிராமத்திற்கு சென்று போராடும் பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தங்கள் அடையாளத்தை காட்ட விரும்பாத வெண்கள், சேலையால் முகத்தை மூடிக்கொண்டு, கண்ணீர் விட்டு அழுதபடி கவர்னரிடம் முறையிட்டதுடன், தங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்டனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த அவர், இந்த சம்பவம் குறித்து மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளார்.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஷேக் ஷாஜகானை உடனடியாக கைது செய்ய கூறி, பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். அதனை தொடர்ந்து, சூழலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், அப்பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் ஷேக்கிற்கு எதிராக குவியும் பாலியல் புகாரால் தேசிய பட்டியலின ஆணையம் சார்பில், மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Share it if you like it