தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி !

தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி !

Share it if you like it

நேற்று முன்தினம் தூத்துக்குடியில் பல திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு, நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், “திருநெல்வேலி அல்வாவை போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிமையானவர்கள். நாட்டுக்காக உழைக்க நெல்லைய்யப்பர் காந்திமதி அம்மன் நல்லாசி தர வேண்டும். பூலித்தேவன், ஒண்டிவீரன், சுந்தரலிங்கனார், கப்பலோட்டிய தமிழன் வஉசி, வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களை தந்த மண், நெல்லை மண்.

தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தமிழர்கள் . உங்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும் என்பது மோடியின் உத்தரவாதம் . பாஜக தான் தமிழ்நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி . உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள், அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள். இது மத்திய அரசின் செயல்பாடுகளால் தான் வருகிறது.

நான் கடந்த 2 நாட்களாக பார்க்கிறேன். தமிழகத்தை சேர்ந்த சகோதர சகோதரியாகிய நீங்கள் மேடையில் இருக்கும் எங்கள் அனைவரையும் ஆசிர்வதிக்கிறீர்கள். நான் முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நீங்கள் என் மீது இத்தனை பாசம் இத்தனை உற்சாகம் மிகுந்த ஆசிர்வாதங்களுடன் அன்பு காட்டுகிறீர்கள். ஆனால் உங்கள் முன் என்னால் தமிழில் பேச முடியவில்லை. எனக்கு கொஞ்சம் தமிழ் தெரியும். சில சமயம் தமிழில் பேச முயற்சி செய்கிறேன். ஆனாலும் என்னால் இன்னும் சரளமாக தமிழ் பேச முடியவில்லை. அதையும் மீறி லட்சக்கணக்கான மக்கள் நான் பேசுவதை கேட்பதற்கு இங்கே ஒன்று கூடியுள்ளீர்கள். இதற்கு காரணம் உங்கள் அன்பு உங்கள் ஆசீர்வாதம் உங்கள் விசுவாசம் தான். உங்கள் அன்புக்கும் ஆசிர்வாதத்துக்கும் உங்கள் விசுவாசத்துக்கும் நான் உங்களை பலமுறை கைகூப்பி வணங்குகிறேன். இவ்வாறு உணர்வுபூர்வமாக பேசியுள்ளார். அவர் பேசிய இந்த காணொளியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://x.com/kaippulla123/status/1763234422852338062?s=20


Share it if you like it