உலகளவில் நோய் தொற்றை சிறப்பாக கையாண்ட தலைவர் பிரதமர் மோடியே – கருத்துக்கணிப்பில் தகவல்

உலகளவில் நோய் தொற்றை சிறப்பாக கையாண்ட தலைவர் பிரதமர் மோடியே – கருத்துக்கணிப்பில் தகவல்

Share it if you like it

கொரோனா பரவலை தடுப்பதில் இந்திய அரசு தோல்வி அடந்துவிட்டதாக பொய் பிரச்சாரம் செய்து அரசியல் லாபம் பார்க்க எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் “கிராவிட்டாஸ் நியூஸ்” எனும் ஆங்கில ஊடகம் வெளியிட்டிருந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

உலக அளவில் நோய் தொற்று காலத்தில் மிகச்சிறப்பாக செயலாற்றும் உலக தலைவர்கள் யார்..? என்ற அந்த கருத்து கணிப்பில் அப்போதைய அமெரிக்க அதிபர், பிரேசில் பிரதமர், இங்கிலாந்து பிரதமர் என பல உலகநாடுகளை சேர்ந்த தலைவர்களை பின்னுக்கு தள்ளி நம் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி முதல் இடத்தை பிடித்திருந்தார். எதிர்க்கட்சிகள் பிரதமர் மீது அவதூறு பரப்பி வரும் சூழலில் உண்மையறிந்து சில இளைஞர்கள் இந்த வீடியோவினை வைரலாக்கி பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.


Share it if you like it