பாரதப் பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உலக புகழ் பெற்ற கேதார்நாத் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு இந்திய பிரதமர் மோடி இன்று காலை தனி விமானம் மூலம் டேராடூன் சென்றார். அவரை ஆளுநர் குர்மித் சிங், மற்றும் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் வரவேற்றனர். அதன் பின்னர் அங்கிருந்து பிரதமர் மோடி கேதார்நாத் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட ஆதிசங்கரர் சிலையை புனரமைத்து 12 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு. பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தான் கொடுத்த வாக்குறுதி படி கேதார்நாத் ஆலயத்தை மீண்டும் சீரமைத்து கொடுத்த பாரதப் பிரதமர் மோடிக்கு பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.