நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி, மணிப்பூர் விவகாரம் பற்றி பிரதமர் விளக்கம்

நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி, மணிப்பூர் விவகாரம் பற்றி பிரதமர் விளக்கம்

Share it if you like it

பாராளுமன்றத்தில் மணிப்பூர் கலவரத்தை குறிப்பிட்டு எதிர்கட்சிகள் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சிகள் அதனுடைய விவாதம் ஆகஸ்ட் 8 முதல் நடக்க உள்ளதாகவும் கடைசி நாளான ஆகஸ்ட் 10ம் தேதி பிரதமர் மோடியே மணிப்பூர் கலவரம் பற்றி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மணிப்பூரில் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களுக்கு இடையே மோதல் போக்கு கடைசியில் கலவரமாக வெடித்து பெரும் சேதாரத்தை உருவாக்கியது. அதில் கடந்த ஜூலை 19 ஆம் தேதி ஒரு வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட அந்த வீடியோவின் அதிர்வலை ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது.

அதனை தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது மணிப்பூர் சம்பவத்தை காரணம் காட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்ற வழக்கத்தை சீர்குலைத்து வருகின்றனர். சமீபத்தில் நாடாளுமன்றத்தை நடத்த ஒரு நிமிடத்துக்கு 2.5லட்சம் செலவாகிறது என்று ஒரு புள்ளிவிவரம் வெளி வந்துள்ள இந்த சமயத்தில், எதிர்க்கட்சிகள் மக்களின் வரி பணத்தை வீணாக்கி வருகின்றனர் என்று மக்கள் இடையே அதிருப்த்தியை உண்டாக்கி உள்ளது.

அதனால், ஆளும் பாஜக தரப்பு நாடாளுமன்ற வளாகத்தின் மாண்பை காக்க முனைப்புடன் செயல்பட்டதால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது எதிர்க்கட்சி தரப்பு. இந்த சூழ்நிலையில் ஆகஸ்ட் 8ம் தேதி முதல் மூன்று நாட்கள் மணிப்பூர் விவகாரம் பற்றிய விவாதம் நடக்க உள்ளது. அதில் கடைசி நாளான ஆகஸ்ட் 10ந்தேதி பிரதமர் மோடியே கலந்து கொண்டு விளக்கமளிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.


Share it if you like it