தமிழக அரசு கட்டுப்பாடுகள்..! குமுறும் தனியார் பள்ளிகள்..!

தமிழக அரசு கட்டுப்பாடுகள்..! குமுறும் தனியார் பள்ளிகள்..!

Share it if you like it

அடுத்த மாதம் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வழக்கம் போல செல்ல அனுமதியளித்துள்ளது தமிழக அரசு! ஆனால் அதற்கு சில கட்டுப்பாடுகளையும் கூடவே விதித்துள்ளது. அரசாங்கம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளின்படி, அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் பள்ளிக்கு வர முடியாது. உதாரணத்திற்கு ஒரு வகுப்புக்கு 40 மாணவர்கள் என்றால், ஒரேநேரத்தில் 20 பேர்தான் நேரடியாக பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 20 பேருக்கு இன்னொறு நாள் நேரடி வகுப்பு நடக்கும்.

அடுத்து நேரடி வகுப்பில் கலந்துக்கொள்ளும் 20 மாணவர்களும் ஒன்றாக வகுப்பில் அமர வைக்க முடியாது. மாறாக அவர்களை சரிபாதியாக பிரித்து ஒரு வகுப்பிற்கு 10 பேர் என்ற அளவில் தான் உட்காரவைக்க முடியும். மேலும் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி அழைத்துவரும் பஸ், வேன் போன்ற வாகணங்களிலும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் அமர்ந்து செல்லும் இருக்கையில் இருவர் மட்டுமே அமர அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தக் கட்டுப்பாடுகளின்படி பள்ளியை நடத்துவது மிகவும் கடினம். அரசாங்கம் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கின்றனர் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி உரிமையாளர்கள். அவர்கள் கூறுவதாவது, ‘ஒரு நாளைக்கு பாதி மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு அனுமதிக்கிறது அரசு. இதை செயல்படுத்தினால் மாணவர்களுக்கு போர்ஷனை முடிக்கவே முடியாது.

ஒரு மாதத்தில் முடிக்கவேண்டிய பாடங்களை முடிக்க இரண்டு மாதங்களாகிவிடும். இதனால் மாணவர்களின் படிப்பு கெட்டுப்போக அதிக வாய்ப்புள்ளது. அடுத்ததாக குறைந்த எண்ணிக்கையில் பள்ளிக்கு வரும் மாணவர்களையும் மீண்டும் பிரித்து அவர்களுக்கு கூடுதல் வகுப்பறைகளை ஒதுக்க அரசு அறிவுருத்துகிறது. ஆனால் அத்தனை மாணவர்களுக்கு ஒதுக்க எந்தப் பள்ளிகளிலும் வகுப்பறைகளே கிடையாது. உதாரணத்திற்கு முதலாம் வகுப்பில் A, B, C ஆகிய மூன்று பிரிவுகளில் மாணவர்கள் படிக்கிறார்கள். சராசரியாக இவர்களுக்கு மூன்று வகுப்பறைகள் கொடுக்கப்படுகிறது. ஆனால் தற்போதைய கட்டுப்பாடுகளின்படி இவர்களுக்கு 6 வகுப்பறைகள் கொடுக்கவேண்டும். முதலாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை இப்படி வகுப்பறைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கவேண்டும் என்றால் அதற்கு பள்ளிகளில் இடவசதி கிடையாது என்பதுதான் நிதர்சனம்.

அதுமட்டுமல்ல… இவர்களுக்கு வகுப்பெடுக்க ஆசியர்களும் போதாது.

இறுதியில் பள்ளிகளுக்கு குழந்தைகளை ஏற்றிவரும் பஸ், வேன்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனுமதிக்கப்பட்ட அளவு கூட குழந்தைகளை ஏற்றிவருவதில் திரும்பவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆக, பள்ளிகள் வழக்கம் போல செயல்பட அறிவுருத்தியிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அதை செயல்படுத்துவதில் பல சுதப்பல்கள் இருக்கிறது. எனவே இதை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்.’ இவ்வாறு பள்ளி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.


Share it if you like it